புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோபி மீது ராதிகாவிற்கு வந்த சந்தேகம்.. பாக்கியாவிற்கு கிடைக்கப் போகும் துருப்புச் சீட்டு, புலம்பும் ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா சமைத்து டெலிவரி செய்த சாப்பாடு அனைத்தும் கெட்டுப்போனதாக இருந்ததால் மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு ஹோட்டல் முன்னாடி வந்து பிரச்சினை செய்தார்கள். இதனால் அங்கு ரைடு வந்த மேல் அதிகாரிகள் பாக்கியாவின் ஹோட்டலை சோதனை செய்து அங்கு சமைத்து வைத்திருக்கும் சாப்பாட்டை பார்க்கிறார்கள்.

அப்படி பார்க்கும் பொழுது பாக்யா ஹோட்டலில் இருக்கும் சாப்பாடு எதுவும் கெட்டுப் போகாமல் நல்ல தரமாக தான் இருக்கிறது. அதே சாப்பாடு வெளியே போனது மட்டும் ஏன் கெட்டுப் போயிருக்கிறது என்று தெரியவில்லை. இதனால் பாக்யாவின் ஹோட்டலுக்கு மூன்று நாட்கள் சீல் வைத்திருக்கிறார்கள். அத்துடன் 50 ஆயிரம் ரூபாய் ஃபைன் போட்டு இருக்கிறார்கள்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று டீல் பேசி முடித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஹோட்டலில் இருக்கும் உணவை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அதை அப்புறப்படுத்த சொல்லி விட்டார்கள். தான் சமைத்த சாப்பாடு எப்படி கெட்டுப் போனது என்று தெரியாத பாக்யா குழப்பத்திலே வீட்டிற்கு போகிறார்.

போனதும் இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அதிர்ச்சியாகி நிற்கும் அந்த நேரத்தில் ஈஸ்வரி, நான் துவங்கி வைத்ததால் தான் உனக்கு இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. நான் ஒரு அதிர்ஷ்டமே இல்லாதவள். என்னுடைய ராசி தான் உன்னை இப்படி கஷ்டப்படுத்துகிறது என்று புலம்புகிறார். உடனே பாக்யா ஏற்கனவே நான் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறேன் என்பது எனக்கு தெரியவில்லை.

இப்படி இருக்கும் பொழுது நீங்களும் இந்த மாதிரி பேசினால் நான் என்ன செய்வேன் என்று சொல்கிறார். நீங்கள் எப்போதுமே எனக்கு நல்லது தான் நினைப்பீங்க. உங்களால் நல்லது மட்டும்தான் நடக்கும் என்று ஈஸ்வரியை சமாதானப்படுத்தி விடுகிறார். இதனை அடுத்து பக்ரீத் ஆர்டர் எடுக்கும் பொழுது வாங்கின பொருட்கள் மற்றும் விற்ற சாப்பாடுகள் மூலம் கிடைத்த வரவு செலவுகளை கணக்கு பார்க்கிறார்.

அப்பொழுது திருப்பிக் கொடுக்க வேண்டியது இன்னும் 8 லட்ச ரூபாய் வேண்டும். ஆனால் இதை எப்படியாவது இரண்டு நாட்களுக்குள் ரெடி பண்ணி பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்பதால் பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இந்த செய்தி அனைத்தையும் கோபி வீட்டில் இருந்தபடி போனில் பார்த்துக் கொண்டு ரசிக்கிறார்.

அப்பொழுது அங்கே வந்த ராதிகாவிடம் நடந்த விஷயத்தை சொல்லி பாக்யாவிற்கு இது ரொம்ப தேவை தான். எனக்கு இப்பொழுது தான் இதை பார்க்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது என்று கோபி வன்மத்தை கொட்டுகிறார். இப்படி கோபி ஓவராக சந்தோஷப்படுவதை பார்த்து ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. அதாவது பாக்கியாவை பற்றி எனக்கு தெரியும்.

அவங்க சமைத்த சாப்பாட்டில் எந்தவித குறையும் சொல்லவே முடியாது. எங்களுடைய ஆபீஸில் கூட பல மாதங்களாக பாக்கியா தான் சமைத்துக் கொடுத்தாங்க. ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்கும் பாக்கியா இதில் சொதப்புவதற்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் ஏதாவது இதில் தில்லாலங்கடி வேலையை பார்த்து இருக்கிறீர்களா என்று கோபி மீது சந்தேகப்பட்டு ராதிகா கேட்கிறார்.

உடனே கோபி நான் என்ன பண்ணப் போகிறேன், பாக்கியா இப்படி கஷ்டப்படணும் என்று நான் எதிர்பார்த்தேன். அது இப்பொழுது நடந்து இருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது சந்தோஷப்பட்டு கொள்கிறேன். மத்தபடி இந்த பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார். ஆனால் கடைசியில் பாக்கியா, ஹோட்டலில் நடந்த விஷயங்களை பொறுமையாக யோசித்துப் பார்க்கும்பொழுது எங்கு தப்பு நடந்து இருக்கிறது. யார் மூலம் நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடுவார்.

அந்த வகையில் பாக்யாவிடம் துருப்புச் சீட்டாக ஆனந்த் மாட்டிக் கொள்வார். பிறகு அவர் மூலமாக கோபி தான் இதற்குப் பின்னணியில் இருந்து தூண்டி விட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்து விடும். அதன் பிறகு தான் கோபியின் உண்மையான முகத்திரை பிள்ளைகள் முன்னாடி தெரிய வரும். அதுவரை கோபியின் ஆட்டம் ஓவராக தான் இருக்கும்.

Trending News