வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புத்தி கெட்ட புருசனை தலையில் அடித்து பாடத்தை புகட்டும் ராதிகா.. மாமியாரின் வாயை அடைத்த சக்காளத்தி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவை அசிங்கப்படுத்தி தோற்கடிக்க வேண்டும் என்று கோபி பல தில்லாலங்கடி வேலையை பார்த்து வருகிறார். அந்த வகையில் பாக்யா புதுசாக ஆரம்பிக்கும் ரெஸ்டாரண்டுக்கு சீப் கெஸ்ட் ஆக வர இருந்த கலெக்டரை வரவிடாமல் தடுக்க முயற்சி பண்ணினார்.

ஆனால் கோபி நினைப்பை தவிடு பொடியாக்கி மண்ணை கவ்வும் வகையில் கலெக்டர் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு வந்தார். ஆனால் என்ன சரியான நேரத்திற்கு வர முடியாமல் அதன் பின் வந்தார். இருந்தாலும் அந்த நிகழ்ச்சி பாக்கியா எதிர்பார்த்தபடி நல்லாவே முடிந்தது. இதற்கு கோபியும் வந்திருந்தார். ஆனால் ராதிகாவிற்கு தெரியாமல் வந்திருக்கிறார்.

பிறகு அங்கு வந்த அனைவரும் புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்கள். அதை இனியா, ராதிகாவிடம் காட்டிருக்கிறார். அடுத்ததாக ராதிகா, கோபியிடம் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வந்தவர்கள் அனைவரையும் போட்டோ மூலம் நான் பார்த்தேன். ஆனால் அதில் ஒருத்தர் மட்டும் எனக்கு யார் என்றே தெரியவில்லை. உங்களுக்கு தெரியுதான்னு பாருங்க என்று போனில் இருக்கும் கோபியின் போட்டோவை காட்டுகிறார்.

Also read: கதிரை மடக்க புது ட்ரிக்ஸ் பாலோ பண்ணும் ராஜி.. மாமியாரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மருமகள்

இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு என்பதற்கு இருப்ப கோபி ராதிகாவிடம் வசமாக சிக்கிவிட்டார். உடனே ராதிகா, கோபி தலையிலேயே அடித்து உங்களை அப்படியே கொட்டனும் என்று அடிக்கிறார். இதை வெளியில் இருந்து பார்த்த இனியா அப்படியே பாட்டியிடம் பற்ற வைத்து விட்டார். அடுத்த நாள் ராதிகா கிச்சனுக்கு வரும் பொழுது அங்கே இனியா, மாமியார் மற்றும் பாக்யா இருக்கிறார்கள்.

அப்பொழுது மாமியார் ராதிகாவிடம் உனக்கும் கோபிக்கும் ஏன் அடிக்கடி சண்டை வருகிறது. கொஞ்சம் கூட கோபி பேச்சைக் கேட்கவே மாட்டியா என்று ராதிகாவை மாமியார் திட்டுகிறார். மாமியார் என்ன திட்டினாலும் சூடு சொரணை இல்லாமல் இருப்பதற்கு ராதிகா என்ன பாக்கியவா? சரியான பதிலடி கொடுக்கும் விதமாக மாமா கிட்ட நீங்க சண்டை போடுவதை கம்பேர் பண்ணா நான் போடுற சண்டை எல்லாம் ஒண்ணுமே இல்லை என்று சொல்லி மாமியார் வாயை அடைத்து விட்டார்.

இதைக் கேட்ட பாக்கியா வேணும் உங்களுக்கு என்பதற்கு ஏற்ப சரியான ரியாக்ஷன் கொடுத்தார். அத்துடன் ராதிகா சொன்னதுக்கு பதில் சொல்ல முடியாமல் அப்படியே உரைந்துபோய் நிற்கிறார் மாமியார். அந்த வகையில் இந்த மாதிரி மாமியாருக்கும், மட்டமான புருஷனுக்கும் இப்படிப்பட்ட ராதிகா தான் சரியான ஆளு என்பதற்கு ஏற்ப பாடம் புகட்டுகிறார்.

Also read: கதிரை உருகி உருகி காதலிக்கும் ராஜி.. பாண்டியனின் மூத்த மகன் வாழ்க்கையில் கும்மி அடித்த மச்சான்கள்

Trending News