வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

எல்லாமே தப்பா இருக்கே.. நிலைகுலைந்து போன ராதிகா!

விஜய் டிவியின் கடந்த வாரம் முழுவதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இரண்டு சீரியல்களின் மகாசங்கமம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை விட சுவாரஸ்யமாகவே ஒளிபரப்பானது. இவ்வளவு நாள் பாக்கியலட்சுமி சீரியலில் பொத்தி பொத்தி வைத்திருந்த எல்லா சீக்ரெட்டையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவிழ்த்து விட்டிருக்கிறது.

பாக்யாவின் வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே மூர்த்தி-தனம் இருவரும் கோபியின் நடவடிக்கை சரி இல்லை என்பதை உணர்ந்ததுடன் ராதிகாவுடன் அவருக்கு இருக்கும் தகாத உறவையும் கண்டுபிடித்தனர். அதன்பின்பு ராதிகா வீட்டிற்கு சென்று, கோபி பற்றியும் கோபியின் குடும்பத்தை பற்றியும் தெரியப்படுத்த மூர்த்தி-தனம் இருவரும் செல்கின்றனர்.

அங்கு ராதிகாவிடம், நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் கோபியை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். அவர் நல்லவர் அல்ல. ஏற்கனவே ஒரு வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினையை மறுமுறையும் சந்திக்காதீர்கள் என்று தனம் சொல்ல, அதன் பிறகு ராதிகாவிடம் பாக்யா தான் கோபியின் மனைவி என்பதை சொல்வதற்கு முன்பே ராதிகாவின் மகள் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்.

இதனால் வெளிப்படையாக பேசமுடியாத மூர்த்தி-தனம் ராதிகாவிடம், ‘நீங்கள் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் கோபியின் குடும்பத்தை முதலில் சந்தியுங்கள். அப்பொழுது தான் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பது புரிய வரும்’ என நாசுக்காக சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.

இதனால் மிகவும் குழப்பம் அடைந்த ராதிகா இடிந்து போய் தலையில் கையில் வைத்துக்கொண்டு அந்த இடத்திலேயே அமர்ந்தாள். இதன்பிறகு ராதிகா நிச்சயம் கோபியிடம் அவருடைய குடும்பத்தை சந்திக்க வைக்கும்படி வலியுறுத்துவாள்.

இருப்பினும் அந்த சந்தர்ப்பத்தை கோபி நிச்சயம் ராதிகாவிற்கு தர மாட்டான். ஒருவேளை ராதிகாவிற்கு பாக்யா கோபியின் மனைவி என்ற விஷயம் தெரிந்தாலும் நிச்சயம் கோபியை பாக்யாவிற்கு விட்டுக்கொடுக்காமல், இப்பொழுது கோபி தான் எனக்கு முக்கியம் என விடாப்பிடியாக இருக்கும் பிடிவாத குணம் உடையவர்களாக ராதிகா இருப்பாள்.

Trending News