Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், உடம்பு சரியில்லாமல் இருக்கும் கோபிக்கு ராதிகா உப்புமா, லெமன் சாதம் என்று பண்ணிக் கொடுப்பது நியாயமே இல்லை என்று ஈஸ்வரி கொந்தளித்து போய் இருக்கிறார். அதனால் ஆபீஸ் விட்டு வீட்டிற்கு திரும்பிய ராதிகாவிடம் சண்டை போடும் விதமாக இதுதான் என் பையனை பார்த்துக்கிற லட்சணமா?
அவன் எப்படி வகை வகையாக சாப்பிட்டு வளர்ந்து வந்தான், அவனுக்கு போய் உப்புமா லெமன் சாதம் கொடுத்து சாப்பிட வைக்கிறாய்? உன்னால ஒழுங்கா சமைக்க முடியாதா என்று செல்வி மற்றும் பாக்கியா முன்னாடி ஈஸ்வரி ராதிகாவை திட்டுகிறார். உடனே கோபி வந்ததும், கோபியிடம் ஒழுங்காக ராதிகாவை சமைத்து தர சொல்லு. காய்கறி வச்சு நல்லா சாப்பிட்டால் தான் உடம்பு சரியாகும் என கோபியிடம் சொல்கிறார்.
அதற்கு ராதிகா, நான் சமைத்த சாப்பாடு எப்படி இருந்தாலும் அதை கோபி நல்லா தான் சாப்பிடுவார் என்று சொல்லி கோபியிடம் உங்களுக்கு நான் சமைச்ச சாப்பாடு பிடிச்சிருக்கு தானே, நல்லா தானே சாப்பிட்டீங்க என்று கேட்கிறார். ஒரு பக்கம் அம்மா இன்னொரு பக்கம் பொண்டாட்டி என்று என்ன சொல்வது தெரியாமல் நடுவில் மாட்டிக் கொண்டு கோபி முழிக்கிறார்.
இருந்தாலும் ராதிகா கோவப்படக்கூடாது என்பதற்காக ராதிகா சமைத்து சாப்பாடு நல்ல தான் இருக்கும் என்று கோபி சொல்லி விடுகிறார். உடனே மறுபடியும் சண்டை போட ஆரம்பித்த ஈஸ்வரியை ராதிகா ஒரு நிமிஷம் உங்களுடன் தனியாக பேச வேண்டும் என்று கூப்பிட்டு ரூம்குள் போய் விடுகிறார். அங்கே போனதும் தேவையில்லாமல் எனக்கும் கோபிக்கும் நடுவில் சண்டை மூட்டி விட்டு பிரச்சனை பண்ண வேண்டும் என்று நினைக்காதீங்க.
நீங்க என்ன சொன்னாலும் நான் வாயை மூடிக்கொண்டு போவதற்கு நான் ஒன்னும் பாக்கியா இல்லை, ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கு மரியாதை என்று என்று சொல்லி ஈஸ்வரிக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டார். அந்த நேரத்தில் கோபி வந்ததும் எதுவுமே பேசாதபோல் ராதிகா உங்களுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்ப்பதற்காக உங்க அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தேன் என்று அப்படியே மாத்தி விட்டார்.
உடனே கோபி அதை என்னிடம் கேட்டால் நானே கொடுத்து விடுவேனே என்று சொல்லி ராதிகாவிடம் கொடுத்துவிட்டு கூட்டிட்டு போய் விடுகிறார். ராதிகா தன்னை இப்படி மிரட்டி அடக்கி வைத்து விட்டாலே என்று பிரம்ம பிடித்தது போல் ஈஸ்வரி அப்படியே அமர்ந்து விட்டார். இதனை அடுத்து ராதிகா தனியாக கூப்பிட்டு பேச போனதிலிருந்து உங்க மாமியாவை காணுமே என்று பாக்யாவிடம் செல்வி கேட்கிறார்.
அந்த நேரத்தில் ஈஸ்வரியும் வந்து பாக்கியாவிடம் ராதிகா என்னை மிரட்டி திட்ட ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் நீ எதுவும் கேட்க மாட்டியா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா கோபி உங்க பையன், ராதிகா உங்க மருமகள் உங்க குடும்ப விஷயத்தில் ஆயிரம் நடக்கும். அதுல எல்லாம் நான் பஞ்சாயத்து பண்ண முடியாது என்று சொல்லி விடுகிறார். உடனே ஈஸ்வரி மறுபடியும் ஒரு டிராமா போடும் விதமாக அவர் போனதிலிருந்து எனக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.
எல்லோரும் கேலியும் கிண்டலும் பண்ண ஆரம்பித்து விட்டீங்க, ஆனாலும் நான் இப்படியே இருந்து விடுவேன் என்று நினைக்காத. ராதிகாவுக்கு நான் யார் என்று காட்டுகிறேன் என்று பாக்கியவுடன் சவால் விட்டு பேசி விடுகிறார். ஆனாலும் ஈஸ்வரி என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் பாக்யா அவருடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக கோபிக்கு தேவையான மாத்திரையை ராதிகா கொடுக்கிறார்.
அப்பொழுதே உங்க அம்மாவை கொஞ்சம் சும்மா இருக்க சொல்லுங்க. நீங்க என்னை கூட்டிட்டு வரும்போது என்ன சொன்னீங்க, அம்மா எதுவும் சொல்லாதபடி பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிதான கூட்டிட்டு வந்தீங்க. அதை ஞாபகம் வச்சுக்கோங்க என்று கோபியை பயமுறுத்தி விட்டார். இதனால் உஷாரான கோபி, அம்மாவிடம் சென்று இனி என்னை டென்ஷன் படுத்தும் விதமாக எதுவும் பேசாத என்று சொல்லி ஈஸ்வரியின் வாயை அடைத்து விடுகிறார்.