செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

சூனியக்கார ஈஸ்வரியால் பாக்கியாவுக்கு ராதிகா வச்ச ஆப்பு.. பச்சோந்தியாக மாறிய கோபி, சந்தோசத்தில் இனியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியின் செயல்கள் எதுவும் நம்பகத்தன்மையாக இல்லை என்பதை ராதிகா உணர்ந்துவிட்டார். அத்துடன் கோபி நம்மளை விட அவருடைய பிள்ளைகள் குடும்பம் தான் முதன்மையாக இருக்கிறது. அதனால் கோபி அவங்க குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கட்டும் என்று ராதிகா முடிவு பண்ணி விட்டார்.

அந்த வகையில் கடைசியாக பிரிவதற்கு முன் ஒட்டுமொத்த குடும்பத்துடன் சந்தோஷமான நேரத்தை செலவிடலாம் என்று முடிவு பண்ணி ராதிகா பிளான் போட்டு அனைவரையும் வெளியே கூட்டிட்டு போகிறார். ஆனால் போகும்பொழுது கூட ஈஸ்வரி இந்த ராதிகாவும் மயுவும் எதுக்கு வருகிறார்கள் என்று கஷ்டப்படும் அளவிற்கு பேசிவிட்டார்.

ஆனால் இந்த பிளானுக்கு ஏற்பாடு பண்ணியதே ராதிகா தான் என்பது யாருக்கும் தெரியாது. பிறகு ஈஸ்வரியை தனியாக கூட்டிட்டு போய் கோபி சமாதானப்படுத்தி அனைவரும் சேர்ந்து வெளியே போய்விட்டார்கள். போனதும் அனைவரும் சந்தோஷமாக சிரித்து பேசி விளையாடி அன்றைய நாளை இனிதாக முடித்து விட்டார்கள். பிறகு கோபி வீட்டிற்கு வந்து, அம்மா இனியா மற்றும் மகனுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ராதிகா வந்து நாளைக்கு நாம் இந்த வீட்டை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாக்கியா கொடுத்த கெடு முடிய போகிறது கிளம்பி விடலாம் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி மற்றும் இனியா, கோபியிடம் நீங்கள் என்னுடன் இருந்தால் தான் எங்களுக்கு சந்தோசமாக இருக்கும். எங்களை விட்டு எங்கேயும் போகாதீங்க என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி இவர்கள் கெஞ்சும்பொழுது கோபி எதுவும் சொல்லாமல் அப்படியே நின்று விட்டார். இதனை அடுத்து ராதிகா மயூவை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். அப்பொழுது கோபி நானும் ட்ரெஸ் பேக் பண்ணிட்டு வருகிறேன் என்று சொல்கிறார். அதற்கு ராதிகா, வேண்டாம் கோபி இந்த வீட்டை விட்டு நானும் மயூயும்தான் கிளம்புகிறோம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இங்கே இருங்கள்.

நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று சொல்லி இனியாவிடம் உங்க அப்பாவை திரும்ப உங்களுக்கு கொடுத்து விட்டேன். சந்தோஷமாக இரு என்று சொல்லி கிளம்பி விடுகிறார். ஆனால் இதன் பிறகு தான் இந்த கோபியுடன் பாக்யா மறுபடியும் போராட வேண்டியதாக இருக்கும். இந்த சூனியக்கார ஈஸ்வரி செய்த சதியால் ராதிகா இந்த முடிவை எடுத்திருந்தாலும் கோபி மாதிரி ஒரு ஆளு தேவையே இல்லாமல் தனியாக வாழ்வதே சிறப்பு.

ஆனால் கோபி, இப்பொழுது கூட ஒரு முடிவை தெளிவாக எடுக்க முடியாமல் நேரத்துக்கு நேரம் பச்சோந்தியாக மாறுவது போல் ராதிகா வீட்டை விட்டு கிளம்பும் அந்த தருணத்தில் கூட எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டு அம்மா மற்றும் இனியா பக்கத்தில் இருந்து கொண்டு முன்னாள் பொண்டாட்டி வீட்டிலேயே சொகுசாக வாழ்ந்திடலாம் என அமைதியாகிவிட்டார். இதுதான் எனக்கும் வேண்டும் என்ற சந்தோஷத்தில் இனியாவும் இருக்கிறார். இதில் பாவமாக வந்துட்டு போனது ராதிகா மற்றும் மயூ தான்.

Trending News