புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

தற்குறியாக இருக்கும் கோபிக்கு ராதிகா கொடுக்கப் போகும் தண்டனை.. மொத்த பாரத்தையும் சுமக்க போகும் பாக்யா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா டான்ஸ் போட்டியில் தோற்றுப் போனதற்கு ராதிகா வந்தது தான் காரணம் என்ற கோபத்தை மொத்தமாக இனியா வீட்டில் வந்து ராதிகாவிடம் காட்டி விட்டார். பிறகு பாக்கியா, இனியாவை கண்டிக்கும் விதமாக நீ எந்த கேள்வி கேட்பதாக இருந்தாலும் உன்னுடைய அப்பாவை தான் கேட்க வேண்டும்.

ஏனென்றால் சும்மா இருந்த ராதிகாவை உங்க அப்பா தான் வற்புறுத்தி கூட்டிட்டு வந்தார். அதோடு மட்டுமில்லாமல் மேடைக்கு வர மாட்டேன் என்று ராதிகா சொல்லிய நிலையில் உங்க அப்பா தான் கையை பிடித்து மேடைக்கு வர வேண்டும் என்று கூட்டிட்டு வந்தார். இதற்கெல்லாம் காரணம் உங்க அப்பா தான் எதைப் பற்றியும் யோசிப்பதும் கிடையாது.

என்ன பிரச்சனை வரும் என்று புத்திக்கு எட்டவும் செய்யாது என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி எதுக்கெடுத்தாலும் என் பிள்ளையை ஏன் குறை சொல்லுகிறாய், அவன் கூப்பிட்டாலும் உடனே ராதிகா வந்து விடணுமா? அவளுக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாதா என்று ஈஸ்வரி திட்ட ஆரம்பிக்கிறார். அதற்கு பாக்கியம் பிடிக்காத வாழ்க்கையில் இருந்து விலகுவதும் பிடித்த வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்வதும் தப்பு கிடையாது.

ஆனால் அதே நேரத்தில் இரண்டுமே எனக்கு வேண்டும் என்று ஆசைப்படுவது மிகப்பெரிய தப்பு. நீங்க பேசாமல் தப்பிச்சு விடுவீங்க இதில் பாதிக்கப்படுபவர்களை பற்றி நீங்கள் யோசிக்கவே மாட்டீங்க என்று பாக்கியம், கோபி மண்டையில் உரைக்கும் படி சொல்கிறார். அதன்பிறகு கோபி என் மேல தான் தப்பு என்று இனியாவிடம் மன்னிப்பு கேட்டு ரூமுக்குள் போய்விடுகிறார்.

அங்கே ராதிகா, இனியா சொன்னதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். ஆனால் அதைப்பற்றி யோசிக்காமல் கோபி, இனியாவிற்கு சப்போர்ட்டாக பேசி தான் ஒரு தற்குறி என்பதை நிரூபித்து விட்டார். இதையெல்லாம் கேட்ட ராதிகா இந்த கோபி எல்லாம் திருந்தவே மாட்டார். இப்படி ஒரு தற்குறி நம்பி நாம் ஏன் கல்யாணம் பண்ணனும் என்ற விஷயத்தை சொல்லாமல் மனதிற்குள்ளேயே நினைக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையும் தேவையில்லை இந்த மாதிரி ஒரு மனிதனும் தேவையில்லை என்ற முடிவுக்கு ராதிகா வந்து விட்டார். அதனால் போகும் போது இந்த குடும்பத்துடன் ஒரு ஒற்றுமையையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி விட்டு போகலாம் என்பதற்காக அனைவரும் சேர்ந்து ரெசார்ட் போகலாம் என பாக்யாவிடம் கேட்கிறார்.

பாக்கியாவும் சம்மதம் தெரிவித்த நிலையில் கோபியிடம் சொல்லி குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேசி ரெசார்ட் வருவதற்கு ராதிகா பிளான் போட்டு விடுகிறார். அதன்படி ஒட்டுமொத்த குடும்பமும் ரிசார்ட் போய் சந்தோசமாக என்ஜாய் பண்ண போகிறார்கள். அதன் பிறகு தான் ராதிகா அதிரடியான முடிவை சொல்லப் போகிறார். அதாவது உங்க ஒற்றுமையான குடும்பத்தில் நான் தேவையில்லாமல் வந்தது தப்புதான்.

அதை சரி செய்ய முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் இனியும் நான் இந்த குடும்பத்துடன் இருக்க விரும்பவில்லை. அதனால் என்னையும் என்னுடைய மகளையும் விட்டுவிடுங்கள் நாங்கள் போய் விடுகிறோம் என்று கோபிக்கு கையெடுத்து கும்பிடு போட்டு போகப் போகிறார். இதுதான் கோபிக்கு கிடைக்கும் மிகப்பெரிய தண்டனையாகவும் இருக்கப் போகிறது. கடைசியில் எல்லா பாரமும் பாக்கியா தலையில் விழப் போகிறது.

Trending News