சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கோபியை தேடி அலையும் ராதிகா, கவலைப்படும் மயூ.. ஈஸ்வரி சொன்னதை கேட்காமல் பாக்யா செய்த காரியம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு நெஞ்சு வலி வந்ததும் பாக்யா உடனே கிளம்பி கோபி இருக்கும் இடத்திற்கு வந்து ஹாஸ்பிடலில் சேர்த்து விடுகிறார். சீரியஸாக இருக்கும் கோபியை காப்பாற்றும் விதமாக டாக்டர்கள் போராடுகிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஈஸ்வரி, இனியா செழியன் என அனைவரும் வந்துவிடுகிறார்கள்.

பிறகு கோபி நிலமையே பார்த்து ஈஸ்வரி மற்றும் இனியா ரொம்பவே பீல் பண்ணி அழ ஆரம்பிக்கிறார்கள். அடுத்து ஆபரேஷன் பண்ணும் விதமாக கையெழுத்து கேட்கிறார்கள். ஆனால் பாக்யா நான் போட முடியாது என்று சொல்லிவிடுகிறார். ஈஸ்வரி நீ போடு ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்லும் பொழுது பாக்யா மறுத்துவிட்டு செழியனை கையெழுத்து போட சொல்கிறார்.

அதன்படி கோபிக்கு ஆபரேஷன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் கோபி இன்னும் வீட்டிற்கு காணவில்லை என்று ராதிகா மற்றும் கமலா தேட ஆரம்பித்து விடுகிறார்கள். அத்துடன் கோபிக்கு போன் பண்ணி பார்க்கிறார்கள். ஆனால் ராதிகா போன் பண்ணுகிறார் என்று தெரிந்ததும் ஈஸ்வரி எடுக்காமல் கட் பண்ணி விடுகிறார். பிறகு தொடர்ந்து ராதிகா கால் பண்ணிய நிலையில் ஈஸ்வரி, கோபியின் போனை சுவிட்ச் ஆப் பண்ணி விடுகிறார்.

இதனால் ராதிகா, நேற்று வரை கோபி ஏன் இப்படி பண்ணினார் என்று கோபமாக இருந்தேன். இன்று போன் எடுக்காத அளவிற்கு அப்படி அவர் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அவரை யோசித்து நான் கவலைப்படுகிறேன். என் வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமோ என்று பயத்தில் அம்மாவிடம் புலம்பி தவிக்கிறார். இதனை கேட்ட மயூ, டாடி இனிமேல் வர மாட்டாரா? என்று கவலையுடன் கேட்கிறார்.

அதற்கு ராதிகா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை டாடி வருவார் என்று சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பி வைக்கிறார். பிறகு பாக்யா வீட்டிற்கு போய் பார்க்கலாம் என்று ராதிகா மற்றும் கமலா இருவரும் சேர்ந்து போகிறார்கள். ஆனால் அங்கே யாரும் இல்லாததால் ராதிகா, கோபி நண்பருக்கு போன் பண்ணி கேட்கிறார். அவரும் நான் பார்க்கவில்லை, பேசவும் இல்லை என்று சொல்கிறார்.

இந்த சமயத்தில் கோபி ஹோட்டலில் இருந்து போன் பண்ணி இன்னும் ஏன் கோபி சார் வரவில்லை என்று கேட்கிறார்கள். அதற்கு ராதிகா அவர் வந்து விடுவார் என்று சொல்லி சமாளித்து போனை கட் பண்ணி விடுகிறார். இதை எல்லாம் பார்த்த ராதிகா பயப்பட ஆரம்பித்து விடுகிறார். கோபி என்னதான் இருந்தாலும் ஹோட்டலுக்கு போகாமல் இருக்க மாட்டார். தற்போது அங்கேயும் போகவில்லை என்றால் கொஞ்சம் பயமாக இருக்கிறது என்று அம்மாவிடம் பீல் பண்ணுகிறார்.

பிறகு அம்மாவை வீட்டிற்கு போ என்று சொல்லி ராதிகா, கோபியை தேடி அலைகிறார். ஆனால் இவ்வளவு தூரம் நடந்ததற்கு பிறகும் கோபிக்கு நெஞ்சு வலி என்ற விஷயத்தை ராதிகா விடம் சொல்ல வேண்டாம் என்று ஈஸ்வரி சொல்லி விடுகிறார். பாவம் எதுவும் தெரியாத ராதிகா கோபியை தேடி அலைகிறார். பிறகு பாக்கியா ராதிகாவை சந்தித்து கோபிக்கு நெஞ்சுவலி வந்த விஷயத்தை சொல்லி விடுகிறார். உடனே பதறிப் போய் கோபியை பார்க்க ராதிகா போகிறார்.

Trending News