சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நெற்கதியாக நிற்கும் ராதிகா, ஆறுதல் சொல்லும் பாக்யா.. ரெண்டு பொண்டாட்டியையும் படாதபாடு படுத்திய கோபி

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா வேண்டாம் என உதவி தள்ளிவிட்டு ராதிகா பின்னாடி போன பிறகும் கோபி ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாமல் பாக்யாவை பழிவாங்கும் எண்ணத்துடன் சுற்றினார். அதனால் அவருக்கு அமைந்த வாழ்க்கையும் பாழாக்கி, அவர் அமைத்துக் கொண்ட ராதிகாவின் நிம்மதியும் தொலைத்துவிட்டு தற்போது நெஞ்சு வலியால் மருத்துவமனையில் இருக்கிறார்.

ஆக மொத்தத்தில் கோபியின் சுயநலத்தினால் இரண்டு பொண்டாட்டிகளையும் படாதபாடு படுத்தி அவர்களுடைய நிம்மதியையும் வாழ்க்கையையும் தொலைத்து விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி கோபியின் அம்மா ஈஸ்வரியும், பையன் என்ன பண்ணினாலும் அதை மன்னித்து விட்டு பாக்கியாவையும் ராதிகாவையும் குற்றம் சொல்லிக்கொண்டே வந்தார்.

அந்த வகையில் தற்போது ஆஸ்பத்திரியில் இருக்கும் கோபியை ராதிகா பார்க்க கூடாது என்று வம்பு பண்ணி வருகிறார். ஏற்கனவே ராதிகா மனதளவில் நொந்து போய்விட்டார். அதிலும் இந்த சூழ்நிலையில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் நெற்கதியாக ராதிகா நிற்கிறார். இந்த சமயத்தில் பாக்கியா பேசும் பொழுது தன்னுடைய ஆறுதலுக்காக பழைய தோழி என்று நினைப்பில் பாக்கியாவிடம் ஆறுதலை எதிர்பார்க்கிறார்.

அதனால் பாக்யாவிடம் நான் கொஞ்சம் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று ராதிகா சொல்கிறார். பாக்யாவும் வாங்க என்று கூப்பிட்டு இருவரும் மனம் விட்டு பேசும் பொழுது நான் நிம்மதியாகவே இல்லை. கோபி உங்க வீட்டில் இருக்கும் வரை நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்தாராம். என்னை கல்யாணம் பண்ணின பிறகு தான் அவருடைய சந்தோசம் மொத்தமும் தொலைந்து போய்விட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே என்னுடைய நிம்மதி தான் போய்விட்டது. கோபியை எப்பொழுது கல்யாணம் பண்ணினேனோ, அப்பொழுதிலிருந்து அவருடைய குடும்பத்துடன் நான் போராடுவதையே என்னுடைய நாட்கள் போய்விட்டது. எனக்குன்னு எதுவுமே இல்லை, நான் இந்த கல்யாணத்தை பண்ணி இருக்கவே கூடாது என்று மனம் உருகி பாக்யாவிடம் ராதிகா பேசுகிறார்.

ராதிகாவின் மன உளைச்சலை பார்த்த பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக எதையும் நினைத்து பீல் பண்ணாதீங்க. நீங்களும் அவரும் ஒன்றாக சேர்ந்து மனம் விட்டு பேசினால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்று ஆறுதல் படுத்துகிறார். அத்துடன் மனக்கவலையில் இருக்கும் ராதிகாவை அரவணைத்து ஒரு நல்ல தோழியாக பாக்கியா ஆறுதல் படுத்தி பேசுகிறார்.

அந்த வகையில் ராதிகாவின் சந்தோஷத்திற்காகவும் கோபியின் உடல்நிலை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவும் கோபி மீது கொடுத்த கேசை பாக்யா வாபஸ் வாங்கி விடுவார். அத்துடன் கோபியையும் ராதிகாவையும் ஒன்றாக சேர்த்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று அட்வைஸ் பண்ணி தியாகி மாதிரி பாக்கியா மொத்தமாக விலகிப் போய் விடுவார். அதனால் இன்னும் சில தினங்களில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப் போகிறது.

Trending News