செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கோபியின் முகத்திரை கிழிய போகுது.. பாக்கியாவை துரத்த பக்கா பிளான் போட்ட ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவிடம் மிகக் கேவலமான முறையில் ராதிகா கோபி தோற்றுப் போய் விட்டார்கள். அத்துடன் வீட்டையும் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார். அடுத்து பாக்கியாவின் மகன் எழில், இனிமேல் எந்த உறவு முறையும் சொல்லிக் கொண்டு அந்த வீட்டு பக்கம் வந்து விடாதீர்கள்.

உங்களுக்கும் அந்த வீட்டிற்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்று கட்டன் ரைட்டாக பேசி விட்டார். இதனால் உச்சகட்ட அவமானத்தில் கோபி வழக்கம் போல் மது அருந்திவிட்டு கண்ணுமுன்னு தெரியாமல் போதையில் பாக்கியா வீட்டு வாசலில் அவருடைய பெயர் பலகையை பார்த்து புலம்பித் தவிக்கிறார்.

Also read: மொத்தமாக குணசேகரனுக்கு சமாதி கெட்டும் குடும்பம்.. நாளுக்கு நாள் கொஞ்சம் ஓவராக தான் போகுது

பிறகு ராதிகா விடம் வந்து சரியாக வாங்கியும் கட்டிக் கொண்டார். ஏதோ வில்லன் மாதிரி பேச்செல்லாம் பேசிவிட்டு வழக்கம் போல காமெடியனாக தான் வருகிறார். அடுத்ததாக கேண்டினில் ராதிகா பாக்கியாவை தொந்தரவு செய்து வருகிறார். சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் பாக்கியாவை மட்டம் தட்டி பேசுகிறார்.

அத்துடன் எப்படி வீட்டிற்கு நாள் குறித்து எங்களை வெளியே அனுப்பி ஜெயித்தியோ, அதே மாதிரி இப்போ நான் சொல்கிறேன் கூடிய சீக்கிரத்தில் இந்த கேன்டினை விட்டு உன்னை வெளியில் துரத்துகிறேன் என்று சவால் விடுகிறார். ஏற்கனவே அடிபட்ட பாம்பாக கொந்தளிப்பில் இருக்கும் ராதிகாவிற்கு இந்த ஒரு விஷயத்தை வைத்து பழிவாங்க முயற்சி செய்கிறார்.

Also read: வந்த சுவடே தெரியாமல் ஊத்தி மூட போகும் விஜய் டிவி சீரியல்.. டிஆர்பி இல்லாததால் எடுத்த அதிரடி முடிவு

அதற்கேற்ற மாதிரி தற்போது இவருக்கு பிரமோஷன் கிடைத்து விட்டது. இனி தலைகால் புரியாமல் ஓவராக தில்லாலங்கடி வேலையை செய்து, பாக்யாவை எப்படி துரத்த வேண்டும் என்று பக்கவாக பிளான் போட்டு ஒவ்வொரு காரியத்தையும் செய்து வருவார். ஆனால் கடைசியில் இவரோட வேலைக்கு தான் ஆப்பு தயாராக போகுது.

இதற்கு இடையில் ராதிகாவின் ப்ரோமோஷன் மற்றும் சம்பள உயர்வு இதையெல்லாம் கேள்விப்பட்டதும் கோபி பொறாமையில் பொங்கி எழுகிறார். என்னதான் கோபிக்கு பிடித்த பொண்டாட்டியாக ராதிகா இருந்தாலும் அவரிடம் எப்பொழுதுமே ஒரு ஆணாதிக்க திமிரு இருக்கிறது. அது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரப் போகிறது. இதனால் கண்டிப்பாக ராதிகாவிற்கு கோபியின் உண்மையான முகத்திரை தெரிய போகுது.

Also read: அழுகாட்சியாக உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. விரைவில் போட உள்ள எண்டு கார்டு

Trending News