Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவின் ஆட்டம் ஆரம்பம் என்பதற்கு ஏற்ப கோபியை வைத்து ஈஸ்வரி ஆடிய ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராதிகாவின் சாம்ராஜ்யம் கை ஓங்கிவிட்டது. அதாவது செண்டிமெண்டாக பேசி பாக்கியா மனசை மட்டும் மாற்றியது இல்லாமல் தனியாக போகிறேன் என்று வீட்டை காலி பண்ணி மயுவை கூட்டிட்டு ராதிகா தனியாக போனார்.
இதனால் கோபி, ராதிகா பின்னாடி போயி சமரசம் செய்து இனி உனக்கும் மயுக்கும் எந்தவித அவமானமும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன். என்னுடன் வீட்டுக்கு வா என்று பாக்யா வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். அப்படி ராதிகா வந்த நிலையில் ஈஸ்வரியை உண்டு இல்லை என்று ஆக்க வேண்டும் என நினைத்து விட்டார்.
அந்த வகையில் ராதிகாவை கோபி வாழ்க்கையில் இருந்து துரத்தி விட வேண்டும் என்று நினைத்த ஈஸ்வரியை தற்போது ரத்தக்கண்ணீர் வடிக்கும் அளவிற்கு ராதிகா வச்சு செய்கிறார். உங்களுக்கு வயசு ஆகியாச்சு இனி ஓரமாக வீட்டில் இருங்க. நான் என் வீட்டுக்காரரை பார்த்துக் கொள்கிறேன். எந்த நேரத்தில் என்ன பண்ணனும் என்று எனக்குத் தெரியும் என எல்லா விஷயத்துலயும் கோபி பக்கத்தில் இருந்து ராதிகா செய்ய ஆரம்பித்து விட்டார்.
இதனை தாங்கிக் கொள்ள முடியாத ஈஸ்வரி, ராதிகா சொன்னதை நினைத்து பீல் பண்ணி கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார். இவ்வளவு நடந்த பிறகும் பாக்கிய எதுவும் பண்ண முடியாத அளவிற்கு ராதிகா அவருடைய மனசையும் மாற்றி ஓரம் கட்டி விட்டார். கோபியும் ராதிகா எது செய்தாலும் சரிதான் என்பதற்கு ஏற்ப அம்மாவை கண்டு கொள்ளாமல் மொத்தமாக பொண்டாட்டிக்கு அடங்கி விட்டார்.
எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டேன் என்பதற்கு ஏற்ப ஈஸ்வரிக்கு இதுவும் வேணும் இன்னமும் அதிகமாகவே வேணும் என்பதற்கு ஏற்ப ராதிகா, ஈஸ்வரியின் கொட்டத்தை அடக்கப் போகிறார்.