வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

குடும்பத்தை கைகழுவி விடும் கோபி.. நாசுக்காக காய் நகர்த்தும் ராதிகா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் கல்லூரி காதலியுடன் சேர்ந்து வாழ கோபி எடுத்த முடிவை தற்போது செயல்படுத்த போகிறான்.

ஏனென்றால் இவ்வளவு நாள் குடும்பத்திற்காக பொறுமையாக இருந்த கோபியை கடந்த சில நாட்களாக எழில் மற்றும் கோபியின் அப்பா ஆகியோர் கோபியை கடுமையான வார்த்தைகளால் பேசியும் கைகலப்பில் ஈடுபட்டதால், ராதிகாவிடம் பாக்யாவை பற்றி இல்லாதது பொல்லாதது சொல்லி தன் மீது அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறான்.

அதுமட்டுமின்றி எழில் எடுத்த முதல் படத்தை குடும்பத்திற்கு போட்டு காட்ட அனைவரையும் அழைத்த போது, கோபியை மட்டும் வர வேண்டாம் என அவமதித்ததால் மனக் கலக்கத்துடன் ராதிகா வீட்டிற்கு செல்கிறான்.

அங்கு முகவாட்டத்துடன் இருக்கும் கோபியை பார்த்த ராதிகா என்ன என கேட்க, இவ்வளவு நாள் என்னுடைய உழைப்பை சுரண்டித் தின்ன குடும்பம் நன்றிகெட்டு நடந்து கொண்டிருக்கிறது என தன்மீது தப்பே இல்லாததுபோல் ராதிகாவிடம் பாக்யாவை தரக்குறைவாக பேசுகிறான்.

அதன்பிறகு ராதிகா விவாகரத்து வாங்க ஆறு மாதம் வேண்டும் என்பதால், அதுவரை அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு முன்பே எங்களுடன் சேர்ந்து இப்பவே வந்துவிடுங்கள் என கோபிக்கு துணிச்சல் கொடுத்து பாக்யாவை வெட்டிவிட நாசுக்காக காய் நகர்த்துகிறார்.

ராதிகாவிற்கு பாக்யா தான் கோபியின் மனைவி என இதுவரை தெரியாமல் இருக்கிறது. இருப்பினும் அது தெரிந்தாலும் ராதிகா இதேபோன்றுதான் நடந்துகொள்வார். ஆகையால் பாக்யாவிற்கு இனிவரும் நாட்களில் ராதிகா வில்லியாக மாறி பாக்கியலட்சுமி சீரியலின் அதிரடி திருப்பத்துடன் சுவாரசியமாக ஒளிபரப்பாக உள்ளது.

Trending News