Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தன் கணவர் இல்லாததால் தன்னுடைய நிலைமை ரொம்பவே மோசமாகிவிட்டது என்று ஈஸ்வரி தற்போது வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ராதிகாவின் அம்மா பேசிய வார்த்தைகள் அனைத்தும் ஈஸ்வரியை காயப்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்ட பாக்கியா, ராதிகாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.
உடனே ராதிகாவும் நீ செய்தது சரி இல்லை என்று அம்மாவை திட்டி விட்டார். இதனைத் தொடர்ந்து ராதிகா, பாக்யா வீட்டிற்கு போகிறார். அங்கு இருந்த ஈஸ்வரிடம் அம்மா பேசுனது ரொம்பவே தவறான வார்த்தைகள். அவங்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஊர் என்ன சொல்லுது, அவங்க என்ன நினைப்பாங்க என்று நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம்.
சந்தர்ப்பம் பார்த்து ஈஸ்வரியை குத்தி காட்டிய ராதிகா
உங்களுக்கு எது சரி என்று படுதோ அதை செய்யுங்க என்று ஆறுதல் படுத்தும் விதமாக பேசுகிறார். இப்படி ராதிகா பேசிக் கொண்டிருப்பதை அங்கே நின்று பாக்யா, ஜெனி மற்றும் செல்வி என அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு தான் இருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப ராதிகா, ஈஸ்வரி இதுவரை ஆடிய ஆட்டத்திற்கு மொத்தமாக பதிலடி கொடுக்கும் விதமாக பேசி விடுகிறார்.
அதாவது நானும் கோபியை கல்யாணம் செய்த பொழுது இந்த ஊரை நினைத்து தான் நீங்கள் என்னை திட்டினீர்கள். அதே மாதிரி வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுதும் இந்த ஊர் என்ன சொல்லுமோ நெனச்சு தான் நீங்க என்ன காயப்படுத்தினீங்க. என்னுடைய குழந்தையும் வேண்டாம் என்று சொன்னீங்க. இப்படி ஊரு என்ன சொல்லணும்னு நினைச்சு ஒவ்வொரு விஷயத்தையும் வைத்து நீங்கள் எங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டீங்க.
அது மட்டும் இல்லாமல் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி யோசிக்காமல் நீங்கள் வளர்ந்த விதத்தை வைத்து எங்களை பேசினீங்க. ஆனால் இப்பொழுது உங்களுக்கு என்று வரும் பொழுது இந்த ஊர் சொல்வது எதுவும் காதல் வாங்கிக் கொள்ளாத அளவுக்கு பிடிக்காமல் போய்விட்டது. இதுதான் உலகம், இனியாவது புரிந்து கொள்ளுங்கள் இந்த ஊருக்காக நம் வாழக்கூடாது.
நமக்கு என்ன தோணுதோ நமக்கு என்ன சந்தோஷம் கிடைக்குமோ அதை நினைத்து தான் நாம் வாழ வேண்டும் என்று ஈஸ்வரிக்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டு ராதிகா கிளம்புகிறார். ஆனால் தன்னுடைய அத்தையே பார்த்து நீங்கள் இப்படி பேசினது தவறுதான் என்பதற்கு ஏற்ப ராதிகாவிடம் பாக்யா சண்டை போடுகிறார். ஆனால் ராதிகா, நான் பேசினதில் எந்த தவறும் இல்லை.
அவங்க பண்ணுன விஷயத்தை நாம் சொல்லி தான் ஆக வேண்டும். இல்லை என்றால் மறுபடியும் இதே மாதிரியே தான் பண்ணிக் கொண்டே இருப்பாங்க. அவங்களை நான் திருத்த முடியாது அதனால் சில விஷயங்களை ஞாபகப்படுத்திட்டு போக தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு ராதிகா கிளம்பி விடுகிறார். இதனை அடுத்து செழியன் மறுபடியும் ஆபீஸ் பிரச்சனையே நினைத்து குடித்து விடுகிறார்.
பிறகு ஓவராக குடித்ததால் செழியனை கோபி, பாக்கியா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டேன் என்று ஒரு பக்கம் கோபி இருந்தாலும், இவருடைய பிள்ளை இப்படித்தான் இருக்கும் என்பதற்கு ஏற்ப செழியனும் திருந்தாமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு குடித்துக் கொண்டே வருகிறார். இதையெல்லாம் பாக்கியா எப்படி சமாளித்து குடும்பத்தையும் ஹோட்டலையும் நடத்த போகிறார் என்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- வில்லங்கம் பிடித்த ராதிகா அம்மாவிற்கு கொடுத்த பதிலடி
- கோபி பக்கம் சாய்ந்த பாக்யாவின் வாரிசுகள்
- அப்பாவை போல் குடிகாரனாக மாறிய பாக்யாவின் வாரிசு