Radhika Sarathkumar: நாட்டாமை குடும்பத்துக்கும், நடிகர் விஷாலுக்கும் வாய்க்கால் தகராறு பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. வரலட்சுமி காதலில் ஆரம்பித்து, நடிகர் சங்க தேர்தல் வரை ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள் நடந்து முடிந்திருக்கிறது.
மறுபடியும் புதிய வம்பை இழுத்திருக்கிறார் நாட்டாமை மனைவி ராதிகா. சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் நேற்று நடிகர் விஷால் செய்தார். தன்னுடைய பிறந்தநாளுக்காக ஏகப்பட்ட விஷயத்தை செய்த விஷால் பெண் பாதுகாப்பு பற்றியும் பேசினார்.
மலையாள சினிமா உலகில் அட்ஜஸ்ட்மென்ட் டீல் நடப்பதை நிறைய நடிகைகள் புகார் தெரிவித்து ஹேமா கமிட்டி மூலம் அது ஊர்ஜிதம் ஆகிவிட்டது. மலையாள சினிமா உலகின் முக்கிய தலைகள் எல்லாம் எங்கே வழக்கு நம் மீது பாய்ந்து விடப் போகிறதோ என தொடர்ச்சியாக தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து வருகிறார்கள்.
நேற்று நடிகர் விஷால் இது குறித்து தன்னுடைய கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார். அதில் சினிமாவுக்குள் வரும் பெண்களை யாராவது தவறாக உபயோகிக்க முயற்சித்தால் அவர்களை செருப்பால் அடியுங்கள் என பேசி இருக்கிறார்.
புரட்சி தளபதியை ரவுண்டு கட்டிய ராதிகா
நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் விஷால் இந்த விஷயத்திற்கு இப்படி ஒரு கருத்தையா சொல்வது. பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் கொடுங்கள் நான் தீர விசாரித்து அவர்கள் மீது ஆக்சன் எடுக்கிறேன் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.
செருப்பால் அடித்து விட்டு வந்து விட்டால் அதன் பின் அந்த பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். அதன் பின்னர் அந்த பெண்ணின் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கும் இதையெல்லாம் யோசித்து அவர் பேசியிருக்க வேண்டாமா என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ராதிகாவிடம் இது பற்றி கேட்டிருந்தார்கள். ராதிகாவும் விஷாலின் கருத்திற்கு வன்மையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மலையாள சினிமா உலகம் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இது போன்ற விஷயங்கள் நடக்கிறது.
ஒரு நடிகர் சங்க தலைவராக விஷால் அதற்கல்லவா தீர்வு பெற்று தர வேண்டும். யூட்யூபில் ஒரு நான்கு பேர் உட்கார்ந்து கொண்டு நடிகைகளை பற்றி எந்தவித ஆதாரமும் இல்லாமல் கீழ்த்தரமாக பேசி வருகிறார்கள்.
அவர்களை நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் விஷால் செருப்பால் அடிப்பாரா. அப்படி அவர் செய்வார் என்றால் நானும் அந்த ஆளை அடிக்க வெளக்கமாறு எடுத்துட்டு வரேன் என பகீர் கிளப்பி இருக்கிறார்.
மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை
- ரியாஸ்கான் மீது மலையாள நடிகை கொடுத்த புகார்
- முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கும் விஷால்
- கோபத்தில் கொந்தளித்த பிக்பாஸ் நடிகை