Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா போலீசிடம் மாட்டிய பொழுது ராதிகா தான் போலீஸிடம் பேசி இனியாவுக்கு எந்த பிரச்சினையும் வராமல் தடுத்து நிறுத்தி இருக்கிறார். பிறகு அங்கே வந்த செழியன், இனியாவை கூட்டிட்டு போகும் பொழுது அதையும் தடுத்து விட்டார். உங்க அம்மா இங்கே நேரடியாக வரவேண்டும், நான் கொஞ்சம் பாக்யாவிடம் பேசின பிறகு தான் இனியாவை இங்கிருந்து விடுவேன் என்று கரராக சொல்கிறார்.
அதன்படி செழியன், பாக்யாவிற்கு ஃபோன் பண்ணுகிறார். உடனே ராதிகா அதை வாங்கி நடந்த விஷயத்தை சொல்லி அந்த இடத்திற்கு வர சொல்கிறார். அப்பொழுது சமையல் போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில் செல்வியை பார்த்துக்க சொல்லி பாக்யா மற்றும் ஈஸ்வரி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். அங்கே போனதும் இனியா பொய் சொல்லிட்டு வந்திருப்பதும், பப்புக்கு போயி பிரண்ட்ஸோட கூத்தடித்து இருக்கிறார் என்று ராதிகா சொல்கிறார்.
அவமானப்பட்ட இனியா எடுக்கப் போகும் விபரீதம்
இதை கேட்டு அதிர்ச்சியான பாக்கியா வாயை மூடிகேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் ராதிகா விடவில்லை, நான் மட்டும் உங்க பொண்ண காப்பாற்றவில்லை என்றால் இந்நேரம் இனியா போலீஸ் ஸ்டேஷனில் இருந்திருப்பாள். அத்துடன் பேப்பர் நியூஸ் என்று உங்கள் குடும்பத்தை பற்றியும் இனியாவை பற்றியும் தப்பு தப்பாக பேசி இருப்பார்கள்.
ஆனால் நான் ஒன்னும் உங்களை மாதிரி சுயநலத்துக்காக உங்க பொண்ணை பயன்படுத்த நினைக்கவில்லை. இப்பொழுது புரியுதா மயூவை நீங்க கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்த பொழுது என்னுடைய வலி என்ன என்று. இதுதான் உங்களுக்கும் இந்த ராதிகாவுக்கும் இருக்கும் வித்தியாசம் என்று பாக்யாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.
இவ்வளவு தூரம் பேசின பிறகு பாக்கியவால் எதுவும் சொல்ல முடியாததால் ராதிகாவை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்கிறார். பிறகு இனியா, ஈஸ்வரி, பாக்யா, செழியன் அனைவரும் வீட்டிற்கு போய் கொண்டு இருக்கும் பொழுது ஈஸ்வரி இனியாவை திட்டுகிறார். ஆனால் பாக்யா மட்டும் எதுவும் சொல்லாமல் மௌனமாக போகிறார். அந்த நேரத்தில் செல்வி போன் பண்ணி நீங்க வாங்க என்னால சமாளிக்க முடியவில்லை என்று கூப்பிடுகிறார்.
அதற்கு பாக்கியா நாங்கள் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். அதுல நான் வெற்றி பெறுவது எனக்கு முக்கியமில்லை. உன்னால் முடிந்தவரை பண்ணு, இல்லை என்றால் விட்டுவிடு என்று செல்விடம் பாக்கியா சொல்கிறார். இருந்தாலும் செல்வி பதட்டத்தில் ஏதோ பண்ணி கொண்டு இருக்கிறார். அதனால் ஒருவேளை கோபி ஜெயிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இதனை தொடர்ந்து இனியா செய்த காரியம் வீட்டிற்கு தெரிந்த நிலையில் அனைவரும் திட்டப் போகிறார்கள். அதிலும் ஈஸ்வரி, குடும்பம் கட்டுக்கோப்பு என்று இனியாவை வெளுத்து வாங்கப் போகிறார். இதனால் இனியா என்ன பண்ணுவது என்று தெரியாமல் விபரீதமாக முடிவெடுக்கப் போகிறார். பிறகு இனியாவை காப்பாற்றும் விதமாக அனைவரும் ஹாஸ்பிடல் வீடு என்று அலையப் போகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- தொல்லை கொடுக்கும் இனியாவால் சிக்கலில் தவிக்கப் போகும் பாக்கியா குடும்பம்
- இனியாவை காப்பாற்றி பாக்யாவிற்கு செக் வைத்த ராதிகா
- பாக்யாவை தோற்கடித்து ஜெயித்துக் காட்டிய கோபி