திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அனாதையாக சுற்றி திரிய போகும் கோபி.. ராதிகா எடுக்கும் அதிரடி முடிவு

குடும்பத்தில் இருக்கும் பெண்களின் மனதில் ஆழமான உணர்வை ஏற்படுத்திய பாக்கியலட்சுமி சீரியல். இதில் கோபி என்னதான் நெகட்டிவ் ஆக இருந்தாலும் அவருடைய நடிப்பை பார்ப்பதற்காகவே இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடுகிறது என்றே சொல்லலாம். ஒரு நேரத்தில் ரொம்பவும் கெத்தாக இருந்த கோபி தற்போது அலம்பல் செய்து கொண்டு படும் மட்டமாக கீழே இறங்கி விட்டார்.

அதாவது ராதிகாவை திருமணம் செய்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து அதால பாதாளத்திற்குள் சென்று விட்டார். அடுத்ததாக இவருடைய மகள் மீது அதிக பாசத்தை வைத்திருந்த இவரை இனியா வேண்டாம் அம்மா தான் வேணும் என்று பாக்கியாவிடம் போய்விட்டார். இதை தாங்கிக் கொள்ள முடியாத கோபி மது அருந்திவிட்டு ரோட்டில் புலம்பிகிட்டு இருந்தார். இதை பார்த்த ஒருவர் பாக்யாவிற்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

Also read: அப்பத்தா கேட்ட கேள்விக்கு நந்தினி கொடுத்த பதிலடி.. அதிர்ச்சியில் குணசேகரனின் அம்மா

அவரும் மனசு கேட்காமல் எழிலை கூப்பிட்டு, கோபியை ராதிகா வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறார். பிறகு பாக்கியா ராதிகாவுக்கு அட்வைஸ் பண்ணி விட்டு கிளம்பி விடுகிறார். அதன் பின் வீட்டிற்கு வந்த பாக்கியா, எழிலிடம் கோபியை அந்த மாதிரி நிலையில் பார்த்தது எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கு. அவரை நான் எப்போதுமே ஒரு கெத்தான ஒருவராக பார்த்துட்டு இப்பொழுது இவரை இப்படி பார்க்க என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொல்லி ரொம்பவும் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

பிறகு அடுத்த நாள் காலையில் ராதிகா, கோபி எழுந்ததும் நேற்று இரவு என்ன நடந்தது என்பதை யோசித்துப் பாருங்கள் என்று கோபத்தை காட்டுகிறார். ஆனால் கோபி எதுவுமே புரியாமல் தலைவலியில் தவித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா இனி மேலும் இப்படி இருந்தால் சரியா இருக்காது என்று அவரது மகளை கூட்டிட்டு வீட்டை விட்டு கிளம்பி வெளியே வருகிறார். இதை பார்த்த கோபி குடிச்சதுக்கு இவ்ளோ பெரிய முடிவு எடுக்கணுமா என்று கேட்கிறார்.

Also read: அண்ணியை அவமதித்த மாமனார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணையுமா?

அதற்கு ராதிகா இது உங்களுக்கு பெரிய விஷயமா இருக்காது யாரோ ஒருத்தர் பாக்கியாவிற்கு கால் பண்ணி சொல்லி அவங்க வந்து இங்க உங்களை விட்டுட்டு அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் ஒன்னும் அவ்வளவு மோசம் கிடையாது. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். நீங்க சரியா இருந்தா என்னோட நிலைமை இந்த அளவுக்கு இருக்காது என்று கோபத்தை கொட்டி தீர்க்கிறார்.

பிறகு கோபி ராதிகாவை எவ்வளவு சமாதானம் செய்தாலும் அதை காது கொடுத்து கேட்காமல் ராதிகா வெளியே போய்விட்டார். அதன் பின் ராதிகா பின்னாடியே கோபி தெருவிற்கு வந்து நடுரோடு என்று கூட பார்க்காமல் ராதிகாவிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். இதை பார்த்த செல்வி மற்றும் பாக்கியா அதிர்ச்சி ஆகி அப்படியே வீட்டுக்கு திரும்புகிறார்கள். பிறகு நடந்ததை அனைத்தும் செல்வி வீட்டில் இருக்கும் அனைவரிடம் கூறுகிறார்.

வீட்டில் இருந்த மொத்த குடும்பமும் ஓடி வந்து வெளியே பார்க்கிறார்கள். கோபி ராதிகாவை தடுக்க முயற்சி செய்தும் அதை கண்டு கொள்ளாமல் ராதிகா காரில் ஏறும் போது கோபி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இதை பார்த்த மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். ராதிகாவும் இவரை விட்டு போய்விட்டால் கோபி நிலைமை என்னவாக இருக்கும் அனாதையாகத்தான் சுற்றித் திரிய போகிறார். ஆனாலும் இவருடைய நிலைமை பார்க்க பரிதாபமாக தான் இருக்கிறது.

Also read: எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

Trending News