புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மூக்கு முட்ட குடிச்சு மட்டையான கோபியை கரை சேர்க்கும் ராதிகா.. பாக்கியாவிற்கு குட் பாய் சொன்ன வாரிசு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தா இறந்த பிறகும் அவர் எழுதி வைத்த கடிதத்தை வைத்து மொத்த குடும்பமும் அழுது வேதனைப்படுகிறார்கள். அதிலும் தாத்தாவின் இறப்பு திடீரென இருக்கும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் தனியாக லெட்டர் எழுதி அவர்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களையும் எழுதி வைத்து இருக்கும் தாத்தாவின் முடிவு எதார்த்தத்தையும் மீறி அமைந்திருக்கிறது.

அடுத்ததாக வழக்கம்போல் கோபிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அவர் தேடிப் போவது மதுக்கடைக்கு தான். அப்படிதான் இப்பொழுது பட்ட அவமானத்திற்கும் ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து ஒதுக்கியதற்கும் வேதனையை தீர்க்கும் வகையில் நண்பருடன் ஒயின் ஷாப்புக்கு போய் விட்டார். அங்கே போனதும் அழுது புலம்பி பாக்கியாவை பழிவாங்காமல் விடமாட்டேன் என்ற டயலாக்கையும் சொல்லி குடிக்க ஆரம்பித்தார்.

கோபியை நம்பிதால் அவஸ்தைப்படும் ராதிகா

ஆனால் ஒவ்வொரு குடிக்கும் ஏதாவது காரணங்களை சொல்லி கணக்கே இல்லாமல் கடை மூடும் வரை மூக்கு முட்ட குடித்து மட்டையாகி விட்டார். ஆனாலும் வீட்டிற்கு போகாமல் இன்னும் வேண்டுமென்று கேட்டு பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார். இவருடைய நிலைமை ரொம்ப மோசமான நிலையில் கோபியின் நண்பர் அவரை வீட்டுக்கு கூட்டிட்டு போக முயற்சி எடுக்கிறார்.

ஆனாலும் கோபி வலுக்கட்டாயமாக குடித்துக்கொண்டே இருப்பதால் நண்பரால் எதுவும் பண்ண முடியாமல் வேடிக்கை பார்க்கிறார். அந்த நேரத்தில் ராதிகா போன் பண்ணி கோபி எங்கே என்று கேட்கிறார். பிறகு கோபி நண்பர், கோபி இருக்கும் நிலைமையை எடுத்து சொன்னதும் அந்த இடத்திற்கு ராதிகா வந்து விடுகிறார்.

வந்ததும் ராதிகா, கோபி மூக்கு முட்ட குடிச்சு இருப்பதை பார்த்து வேற வழி இல்லாமல் வீட்டில் எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்று கை தாங்கலாக பிடித்து கோபியை வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். ஆனால் அங்கே மயூ இருப்பதால் இக்கட்டான சூழ்நிலையில் ராதிகா என்ன பண்ணுவது என்று தெரியாமல் தலை குனிந்து போய் நிற்கிறார்.

பிறகு விடிந்ததும் வழக்கம்போல் கோபிடம் கச்சேரியை ஆரம்பிப்பார். ஆனால் ராதிகா என்ன சொன்னாலும் தலையாட்டிக் கொண்டு பின்பு கோபி குடிக்க போவது வழக்கமாகிவிடும். இதனை அடுத்து பாக்கிய குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் வேலையை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அப்பொழுது எழில், அமிர்தாவிடம் நாம் இங்கிருந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டது.

எல்லோரிடமும் சொல்லி கிளம்பலாம் என்று மாடியில் இருந்து வருகிறார்கள். இவர்கள் கிளம்புவதை பார்த்து இனியா போக வேண்டாம் என்று அழுது தடுக்கிறார். ஆனால் எழில் சமாதானப்படுத்தி விட்டு நான் போயிட்டு வருகிறேன் என்று எல்லோரிடமும் சொல்லி பாக்யாவிற்கு குட் பாய் சொல்லிட்டு கிளம்பி விடுகிறார். அத்துடன் இந்த குடும்பத்திற்கு எல்லாமே நீ தான் இருந்து பார்க்க வேண்டும் என்று செழியன் இடம் அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு கிளம்புகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News