Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், அழகு போல பொண்டாட்டி இருந்தாலும் கூத்தடிக்க வேற ஒரு பொண்டாட்டி தேவை என்று ஒரு சொலவடை உண்டு. அது போல தான் கோபி, பாக்கியாவை விட்டுட்டு ராதிகா பின்னாடி போய் கட்டினால் இவரை தான் கட்டுவேன் என்று ஒத்தக்காலில் பிடிவாதமாக நின்னு கோபி ராதிகாவை கல்யாணம் பண்ணினார்.
அதிலும் என்ன கூத்து என்றால், கோபிக்கு பிள்ளைகளுக்கு கல்யாணமான பிறகு தான் பாக்யா பிடிக்காமல் போய்விட்டார். இதனால் கோபி பண்ணின பாவம் தற்போது ஒட்டு மொத்த குடும்பமும் அவமானப்பட்டு நிற்கிறது. அந்த வகையில் கோபியை நம்பி பிள்ளை பிள்ளை என பின்னாடியே அலைஞ்ச பாவத்துக்கு ஈஸ்வரிக்கு தற்போது தண்டனை கிடைத்து விட்டது.
ஈஸ்வரிக்கு எதிராக மாறிய கோபி ராதிகா
ராதிகாவின் அம்மா கமலா அவருடைய வஞ்சகத்தை தீர்க்கும் வகையில் ஈஸ்வரி மீது பொய்யான கம்ப்ளைன்ட் கொடுத்து அரெஸ்ட் பண்ண வைத்து விட்டார். பிறகு ஈஸ்வரி தற்போது கோர்ட்டில் நிற்கும் போது ராதிகாவே கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். இவங்க தான் உங்களை கீழே பிடித்து தள்ளினார்களா என்று வக்கீல் கேட்கிறார். அதற்கு ராதிகா ஆமாம் இவங்க தான் என்னை தள்ளிவிட்டார்கள் என்று சொல்லிவிடுகிறார்.
அடுத்ததாக கோபியை கூப்பிட்டு விசாரிக்கும் பொழுது, உங்க அம்மா உங்களிடம் பலமுறை இந்த குழந்தை வேண்டாம் களச்சிடு என்று சொன்னார்களா என்று லாயர் கேட்கிறார். அதற்கும் கோபி ஆமாம் என்று சொன்ன ஒத்த வார்த்தையால் ஈஸ்வரிக்கு தண்டனை கிடைக்கும் விதமாக ஜெயிலில் போடும்படி தீர்ப்பு கிடைத்து விட்டது.
இதை எதிர்பார்க்காத ஈஸ்வரி அதிர்ச்சியில் பாக்யாவை அரவணைத்து புலம்பி தவிக்கிறார். பாவம் ஈஸ்வரிக்கு கோபி நம்பிய பாவத்துக்கு தண்டனையாக இருந்தாலும் அந்த அளவிற்கு மோசமான ஒரு மாமியாராக எங்கேயும் ஈஸ்வரி நடந்ததே இல்லை. அப்படிப்பட்ட ஈஸ்வரிக்கு இது ஒரு பெரும் அடியாக தலையில் இடியாக விழுந்து விட்டது.
அத்துடன் பாக்யாவிடம் நான் இனி ஜெயிலில் தான் இருக்கணுமா என்று பாவமாக கேட்கும் பொழுது பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தெரிந்தும் மௌனமாக இருக்கும் கோபியையும், பாக்கிய குடும்பத்தை பற்றி தெரிந்து அம்மா பேச்சைக் கேட்டு பொய்யாக புகார் கொடுத்த ராதிகாவையும் பார்ப்பதற்கு கடுப்பாக இருக்கிறது.
இனி இதனைத் தொடர்ந்து மாமியாரை வெளியே கொண்டுவரும் முயற்சியில் பாக்கிய பழனிச்சாமி இணைந்து இந்த கேசில் உண்மையை கண்டுபிடிக்க போகிறார்கள். அப்பொழுதுதான் இந்த ராதிகாவின் ஆட்டமும் கமலாவின் வக்கிர புத்தியும் தெரியவர போகிறது. கடைசியில் இந்த கோபி ராதிகா ஒன்றாக வாழாமல் இவர்களுக்குள் விரிசல் வந்து தனி மரமாக கோபி தள்ளாடப் போகிறார்.
தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவித்து தான் ஆகணும் என்பதற்கு ஏற்ப கோபிக்கு இதுதான் கிடைக்கப் போகும் சரியான தண்டனையாக பாக்கியா குடும்பத்துடன் வாழ்ந்து கோபியை ஒதுக்கப் போகிறார். ஆனால் அதற்குள் இந்த ஈஸ்வரியை வெளியே எடுக்கும் முயற்சியில் இன்னும் என்னெல்லாம் கூத்து நடக்கப் போகிறதோ, இந்த கோபி யாருக்கும் ஆதரவும் இல்லாமல் ராதிகாவையும் தட்டிக் கேட்காமல் ஒரு கோழையாக தான் நிற்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- ஈஸ்வரியை பார்த்து அலறி அடித்து ஓடி ஒளிஞ்ச ராதிகா
- கோபியை நம்பின பாவத்துக்கு ஈஸ்வரிக்கு கிடைத்த தண்டனை
- ராதிகா மீது வெறுப்பை கொட்டும் கோபி