வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அசிங்கப்பட்டதை ராதிகாவிடம் கொட்டி தீர்த்த கோபி.. அடுத்த குழந்தைக்கு பிளான் பண்ணிய அங்கிள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா நெனச்சபடி மாமியார் மாமனாருக்கு நல்லபடியாக ஃபங்ஷனை நடத்தி முடித்து விட்டார். அத்துடன் ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து பேசி அருமையான தருணங்களை பகிர்ந்து கொண்டு சந்தோஷப்பட்டு கொண்டார்கள். அப்பொழுது எழில் நாங்கள் கிளம்புகிறோம் என்று அமிர்தாவை கூட்டிட்டு கிளம்புவதற்கு முடிவெடுத்து விட்டார்.

அந்த நேரத்தில் யாருமே எழிலை தடுக்காமல் நல்லபடியாக முன்னேறி காட்டு என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். அத்துடன் தாத்தா தனியாக எழிலை கூட்டிட்டு நீ நெனச்சபடி உன்னுடைய தொழிலில் வெற்றி பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் அமிர்தா மற்றும் நிலாவை சந்தோஷமாக பாதுகாக்கும் பொறுப்பும் உன்னிடம் இருக்கிறது.

வழக்கம்போல் ராதிகாவிடம் புலம்பி தவிக்கும் கோபி

உனக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் நிலா தான் முதல் குழந்தை அதை ஞாபகத்தில் வைத்துக்கொள். அதை மாதிரி ஈஸ்வரி சொன்னதும் தப்பா எடுத்துக்காத, அவள் என்ன சொன்னாலும் உன்னுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து தான் பேசி இருக்கிறார். அதனால் ஈஸ்வரி சொன்னதையும் நிறைவேற்றும் விதமாக உனக்கும் அமிர்தாவுக்கும் ஒரு குழந்தை இருக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

இதனைத் தொடர்ந்து எல்லாரிடமும் சொல்லி எழில், அமிர்தா அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். பிறகு வீட்டிற்கு போன பாக்யா குடும்பம் சந்தோஷமாக பேசி அந்த நாளை நினைத்து ஒவ்வொரு விஷயங்களையும் சொல்லி குடும்பமாக சேர்ந்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். ஆனால் அப்பா அம்மா ஃபங்ஷனில் சரியாக கலந்து கொள்ள முடியாமல் மூன்றாவது நபர் போல் ஒரு ஓரமாக நின்னுட்டு வந்ததை நினைத்து கோபி வழக்கம் போல் குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு போகிறார்.

போனதும் ராதிகாவிடம், பங்க்ஷனில் கோபிப்பட்ட அவமானத்தை அசிங்கத்தையும் சொல்லும் விதமாக ஒன்று விடாமல் எல்லாத்தையும் சொல்லி புலம்புகிறார். அதற்கு ராதிகா, இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும். அதனால் தான் உங்களையும் போக வேண்டாம் என்று சொன்னேன். நீங்கள் எப்பொழுது நான் சொல்வதை காது கொடுத்து கேட்டீங்க.

கேட்டிருந்தால்தான் இவ்வளவு தூரத்துக்கு பிரச்சினை வந்து இருக்காது என்று சொல்கிறார். ஆனாலும் கோபி புலம்புவதை பார்த்து ராதிகா வேதனையுடன் கோபிக்கு ஆறுதல் சொல்கிறார். உடனே கோபி ராதிகாவை கொஞ்ச ஆரம்பிக்கிறார். பிறகு ராதிகா அவரை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார். இவர்கள் பண்ணும் அலப்பறை பார்க்கும் பொழுது அடுத்த குழந்தைக்கு தயாராகிறார்கள் போல தெரிகிறது.

அந்த வகையில் இன்னும் இந்த மாதிரியே காட்சிகளை வைத்து கதை ஓட்டும் அளவிற்கு மட்டமான கதையை கொண்டு வரப் போகிறார்கள். கடைசி வரை பாக்கியாவை பற்றி கோபி புரிந்து கொள்ளவும் மாட்டார், செய்தது தப்பு என்று உணர்வும் வாய்ப்பில்லை. அடுத்து கோபி சவால் விட்ட மாதிரி பாக்கியாவிடமிருந்து பிள்ளைகளை பிரித்துக் காட்டி அதன் மூலம் சந்தோஷப்பட்டு சைக்கோ மாதிரி நடந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News