வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ராதிகாவை அசிங்கப்படுத்திய பாக்யாவின் மாமனார்.. கோபத்தில் சக்காளத்தி எடுக்கும் முடிவு

விஜய் டிவியில் அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் தற்போது தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கூறி ராதிகா வீட்டிற்கு கோபி வந்துள்ளார். தங்குவதற்கும், தூங்குவதற்கும் கூட இடம் இல்லாமல் அனாதை போல இருப்பதாக கூறி உள்ளார்.

மேலும் என்னிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை நீ தான் என ஆசை வார்த்தைகளை அள்ளி விடுகிறார். உடனே கோபி, ராதிகா வீட்டில் இருந்து வெளியேறுவதை கோபியின் தந்தை ராமமூர்த்தி பார்த்துவிடுகிறார். இவன் இன்னும் அடங்க வில்லையா என ராதிகா வீட்டினுள் ராமமூர்த்தி செல்கிறார்.

Also Read : சக்களத்திடம் சரணடைந்த கோபி.. 40 லட்சத்திற்கு புருஷனை விற்ற பாக்யா!

அப்போது ராதிகாவை கண்டபடி திட்டுகிறார் ராமமூர்த்தி. அது வரைக்கும் கோபி மேல மட்டும் தான் தப்புன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன், விட்டு வெளியே வந்த உடனே உன்ன தான் பார்க்க வந்திருக்கான். அதுக்கும் நீயும் அனுமதித்திருக்க. நீயும் எல்லாத்தையும் திட்டம் போட்ட தான் பண்ணியிருக்க.

எல்லா விஷயத்துலயும் நீயும் உடந்தையாக இருந்திருக்க என ராமமூர்த்தி கோபப்படுகிறார். அப்போது ராதிகாவின் அண்ணன் சும்மா நிறுத்துங்க, உங்களோட பையன் தப்பு பண்ணா அவரு சட்டையை பிடிச்சு எதுக்குடா இங்க வந்தேன்னு கேளுங்க. இங்க வந்து தேவையில்லாமல் கத்தாதீங்க என்று கூறுகிறார்.

Also Read : டாப் சீரியலை விரட்டியடித்த சென்டிமெண்ட் சீரியல்.. டிஆர்பி-யில் மல்லுக்கட்டும் சன், விஜய் டிவி

உடனே மனவேதனையுடன் இராமமூர்த்தி ராதிகா வீட்டிலிருந்து வெளியே செல்கிறார். அதன் பின்பு ராதிகாவிடம் அவரது அண்ணன் இவங்க எல்லோரும் கொடுக்கிற டார்ச்சர் தான் கோபி இங்க வந்திருக்காரு என பேசுகிறார். இதனால் ராதிகாவும் மனம் மாறி கோபி கஷ்டத்தில் தான் இருக்கிறார் என்பது போல உணர்கிறார்.

இதனால் ராதிகா தற்போது கோபி பரிதாப நிலையில் இருக்கிறார் என்று அவரை ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. கோபி, பாக்யா இடையே விவாகரத்து ஆனதால் சுலபமாக ராதிகா கோபியை திருமணம் செய்துகொள்ளலாம். இதனால் பாக்யாவுக்கு சக்காளத்தியாக மாற உள்ளார் ராதிகா.

Also Read : பாரதியால் குடிக்கு அடிமையான வெண்பா.. அதிரடியான ட்விஸ்ட்டில் பாரதிகண்ணம்மா!

Trending News