Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், திருந்தாத செழியன் அப்பாவைப் போல பிரச்சனை என்றதும் குடித்துவிட்டு வீட்டிற்கு வர ஆரம்பித்து விடுகிறார். அதுவும் கோபியுடன் சென்று குடித்துவிட்டு கண்ணுமுன்னு தெரியாமல் தள்ளாடுகிறார். இந்த ஒரு சான்ஸ் வைத்து கோபி, செழியன் இடம் ஆறுதலாக பேசி தன் பக்கம் இழுக்க பார்க்கிறார். அந்த வகையில் செழியனை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்.
இதனை பார்த்த பாக்கியா மற்றும் ஜெனி, செழியன் ஏதோ ஒரு தவறான வழியில் போகிறார் என்பதை நினைத்து பயப்பட ஆரம்பிக்கிறார்கள். அதுவும் ஜெனி, செழியன் பண்றதை பார்த்து மறுபடியும் மாலினி கூட பழக்கம் இருக்குமோ என்று சந்தேகப்பட ஆரம்பிக்கிறார். அதன்படி பாக்கியாவிடம் இதைப் பற்றி சொல்கிறார். ஆனால் பாக்கியா, நீ நினைக்கிற மாதிரி இருக்காது செழியன் திருந்தி விட்டான்.
பக்கவாக பிளான் பண்ணி காய் நகர்த்தும் கோபி
தற்போது ஆபீஸ்ல ஏதாவது பிரச்சினை இருக்கும், அதனால் தான் இப்படி இருக்கிறான். ஆனால் நான் கூப்பிட்டு பேசுகிறேன். மறுபடி இப்படி ஒரு தவறு நடக்காதபடி இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஜெனிக்கு ஆறுதலாக சொல்கிறார். உடனே செழியனை கூட்டிட்டு பாக்யா, ஈஸ்வரி ரூமுக்கு போகிறார். அங்கே போய் செழியனை கண்டித்து பேசுகிறார்.
அப்பொழுது மறுபடியும் ஜெனி உன் மேல் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார். நீ இன்னும் மாலினி கூட பேசிகிட்டு இருப்பதாகவும், அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறாய் என்று ஜெனி சந்தேகப்படுகிறார். ஜெனியை வீட்டிற்கு கூட்டிட்டு வர எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று உனக்கு தெரியும். அதனால் மறுபடியும் ஏதாவது தேவையில்லாத பிரச்சினை பண்ணி ஜெனியை குழப்பி விடாதே.
ஒழுங்காக உனக்கான வாழ்க்கை வாழ பழகிக் கொள் என்று செழியனை பயமுறுத்தும் அளவிற்கு பாக்கியா கண்டித்து பேசுகிறார். உடனே செழியன், நான் இனி குடிக்க மாட்டேன் என்று பாக்யாவிற்கு வாக்குறுதி கொடுக்கிறார். அத்துடன் ஜெனி இடம் எனக்கு ஆபீஸ் பிரச்சனை இருப்பதினால் தான் இப்படி பண்ணி விட்டேன். மற்றபடி நீ நினைக்கிற மாதிரி மாலினி என் வாழ்க்கையில் கிடையாது என்று சத்தியம் செய்கிறார்.
அடுத்ததாக ராதிகா அம்மா, கோபி செழியனுக்கு செய்த உதவியை பார்த்து திட்டுகிறார். உங்கள் குடும்பம் உங்களை எவ்வளவு அவமானப்படுத்தி பேசினாலும் நீங்க திருந்தவே மாட்டீங்களா என்று கோபி இடம் தேவையில்லாத விஷயங்களை பேசி தூண்டி விடும் அளவிற்கு கோபப்படுத்தி வேடிக்கை பார்க்கிறார். ஆனால் கோபி, எங்கள் குடும்ப விஷயத்தில் தலையிடாதீர்கள்.
உடம்பு பிரச்சினைக்கு வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்தீங்கன்னா அதை மட்டும் பார்த்துட்டு போங்க. மற்றபடி என் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று சொல்லி திட்டி விட்டு விட்டு போய்விடுகிறார். ஆனாலும் திருந்தாத ராதிகாவின் அம்மா ஏதாவது பிரச்சனையை இழுப்பதற்கு சகுனி வேலையை பார்த்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக இனியா நடக்கும் டான்ஸ் போட்டியில் நான் ஜெயித்து விட வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருகிறார்.
அடுத்ததாக எழில், அவருடைய கேரியரை நினைத்து ரொம்பவே பயந்து பீல் பண்ணுகிறார். இந்த நேரத்தில் அம்மாவிடம் பேசினால் சரியாக இருக்கும் என்று பாக்யாவிற்கு ஃபோன் பண்ணுகிறார். பிறகு பாக்யா, எழிலுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பேசி ஊக்கப்படுத்தி தன்னம்பிக்கையுடன் முயற்சி செய் வெற்றி உனக்கு கிடைக்கும் என்பது போல் பொறுப்பான அம்மாவாக பேசுகிறார்.
ஆனால் இதையெல்லாம் தொடர்ந்து கோபி விரித்த வலையில் ஒவ்வொருவரும் சிக்கும் விதமாக இனியா மற்றும் செழியன் கொஞ்சம் கொஞ்சமாக அப்பா பக்கம் சாய ஆரம்பித்து விட்டார்கள். இனி இதையெல்லாம் வைத்து கோபி நடத்தப் போகும் நாடகத்திற்கு பலியாடாக பாக்கியா சிக்கப் போகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- Bhakkiyalakhsmi: கோபிக்கு கெடு வைத்த சக்காளத்தி குடும்பம்
- Bhakkiyalakshmi: கோபி வச்ச ஆப்பு பாக்கியாவுக்கு இல்ல ராதிகாவுக்கு
- Bhakkiyalakshmi: கோபிக்கு சங்கு ஊத போகும் மகன்கள்