வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

செழியன் மாதிரி இல்லாமல் பாக்கியாவுக்காக ஆவேசமான ஜெனி.. கோபியை நம்பியதால் ராதிகாவிற்கு ஏற்பட்ட அவமானம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு ஏற்ப, அமைதியாக தான் உண்டு தன் வேலை என பார்த்துக் கொண்டிருந்த பாக்யாவிற்கு தொடர்ந்து கோபி கொடுத்த டார்ச்சரால் திருப்பி பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாக்கியா துணிந்து விட்டார். ஆனால் இதை தாங்கிக் கொள்ள முடியாத கோபி, பாக்கியாவை அவமானப்படுத்தி பழிவாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சவால் விடும் அளவிற்கு பாக்யா வீட்டு வாசல் முன் சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

ஆனால் பாக்கியாவும் நீ சண்டை போட்டால் நானும் சண்டை போடுவேன் என்பதற்கு ஏற்ப இறங்கி நல்ல வச்சு செய்து விட்டார். இந்த விஷயம் வீடியோ மூலம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் ராதிகாவின் பெயரும் டேமேஜ் ஆகிவிட்டது. இதனால் ராதிகாவின் அம்மா அந்த வீடியோவை ராதிகாவிடம் காட்டி எல்லாத்துக்கும் காரணம் இந்த பாக்கியா தான் என்று உசுப்பேத்தி பேசுகிறார்.

ஆனால் ராதிகா, யாரா இருந்தாலும் அந்த வேலையை தான் பார்த்திருப்பாங்க அதை தான் பாக்யாவும் செய்திருக்கிறார். கோபி மட்டும் என்ன சும்மாவா இருந்தாரு தேவையில்லாமல் பாக்யா ஹோட்டலில் எதற்கு பிரச்சினை பண்ண வேண்டும். அதுவும் பொதுமக்கள் சாப்பிடும் உணவில் இந்த மாதிரி கலப்படம் செய்தால் எந்த அளவுக்கு விபரீதம் ஆகும் என்று யோசிக்க கூட தெரியாத சின்ன பையனா என்று கோபியை திட்டி விடுகிறார்.

ஆனால் கோபி, நீ என்ன சொன்னாலும் நான் பாக்யாவை பழி வாங்கி தீர்வேன் என்ற மனநிலையில் இருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி ராதிகாவின் அம்மாவும் கோபிக்கு சப்போர்ட் பண்ணி பேசி வருகிறார். இதனைத் தொடர்ந்து இனியா காலேஜுக்கு போன இடத்தில் அங்கே இருப்பவர்களும் பாக்யா மற்றும் கோபி போட்ட சண்டையின் வீடியோவை பார்த்து அனைவரும் கலாய்த்து பேசுகிறார்கள்.

தாங்க முடியாத இனியா நேராக வீட்டிற்கு போய் பாக்யாவை குறை சொல்லும் விதமாக திட்டி தீர்க்கிறார். ஆனால் பாக்கியா தன் மீது எந்த தவறும் இல்லை என்று இனியாவிற்கு புரிய வைக்கும் விதமாக சில விஷயங்களை சொல்கிறார். இதை கேட்டதும் இனியா சும்மா எப்ப பாத்தாலும் எனக்கு கிளாஸ் எடுக்காதே என்று திட்டி விட்டுப் போய் விடுகிறார்.

உடனே ஜெனி, அத்தை மீது எந்த தவறும் இல்லை நீ புரிந்து நடந்துக்கோ. தேவையில்லாமல் கோபப்பட்டு நீயும் சண்டை போட்டால் பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க என்று அறிவுரை செய்கிறார். இதை கேட்டதும் இனியா நான் அப்பாவை பார்த்து பேசிக்கொள்கிறேன் என்று கோபமாக கிளம்பி ராதிகா வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் கோபி இல்லை என்று தெரிந்ததும் ராதிகா அம்மா இனியாவையும் பாக்கியவையும் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்.

இதையெல்லாம் பார்த்த ராதிகா, அம்மாவை தடுக்க முயற்சி எடுக்கிறார். ஆனாலும் ராதிகாவின் அம்மா கொஞ்சம் வாய் துடுக்கலாக பேசிய பொழுது இனியா எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான். இவங்க வந்த பிறகு தான் எங்க குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி இல்லாமல் சண்டையும் சச்சரவுமாக இருந்து கொண்டே இருக்கிறது என்று எல்லா பழியையும் ராதிகா மீது போட்டு விட்டார்.

இந்த நேரத்தில் இனியாவை தேடி ஜெனியும் அங்கே போய் விடுகிறார். போன இடத்தில் பாக்யாவை திட்டும் விதமாக ராதிகா அம்மா பேசியதை கேட்டதும் ஜெனியும் மனசில் இருந்த பாரம் எல்லாம் கொட்டும் விதமாக ராதிகாவை நல்ல நாலு கேள்வி கேட்டு விட்டார். செழியன் மக்கு மாதிரி இருப்பதற்கு அட்லீஸ்ட் பாக்கியாவின் மருமகள் ஆவது கொஞ்சம் சூடு சொரணையோடு இருப்பதை பார்க்கும் பொழுது நன்றாக தான் இருக்கிறது.

ஆனால் இதற்கு ஒரு விதத்தில் ராதிகா காரணமாக இருந்தாலும் மொத்த தவறும் கோபி மீது தான் இருக்கிறது. அதை யாரும் சொல்லாமல் எல்லா பழியையும் பாக்கியா மற்றும் ராதிகா மீது போடுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும். ஆகமத்தில் கோபியை நம்பிப்போன ராதிகாவிற்கு ஏற்படுவது அவமானமும் கஷ்டமும் தான். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது ராதிகா நீயும் வேண்டாம், உன் சகவாசமும் வேண்டாம் என்று கோபி விட்டு போகப் போகிறார்.

Trending News