வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ராகவா லாரன்ஸ் இயக்கிய 4 சூப்பர் ஹிட் தெலுங்கு படங்கள்.. அஸ்திவாரம் போட்டதே அங்கதான்

தன்னுடைய அயராத உழைப்பால் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். சிறுவயது முதலே நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்குனராக முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் தான் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் தெலுங்கில் அவர் இயக்கிய நான்கு படங்களைப் பற்றித்தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

மாஸ்: 2004ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனா,ஜோதிகா,சார்மி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாஸ் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இத்திரைப்படம் தான் ராகவா லாரன்ஸ் தெலுங்கில் முதலில் இயக்கிய திரைப்படம். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்.

ஸ்டைல்: 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டைல் திரைப்படத்தை இயக்கியும், கதாநாயகனாகவும் ராகவா லாரன்ஸ் நடித்து அசத்தியிருப்பார். இவருடன் நடிகர் பிரபுதேவா,சார்மி, கமாலினி முகர்ஜி உள்ளிட்டோர் நடித்து இருப்பர். நடனத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழில், லட்சியம் ஒரு தாயின் ஆசை என்ற டைட்டிலில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

டான்: 2007 ஆம் ஆண்டு, நடிகர் நாகார்ஜுனா,அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தை இயக்கிய ராகவா லாரன்ஸ், இத்திரைப்படத்தில் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார் அதுமட்டுமின்றி நாகார்ஜுனாவின் தம்பி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். தெலுங்கில் இத்திரைப்படம் மாஸான வரவேற்பு பெற்ற நிலையில் ஹிந்தியிலும் டான் நம்பர் 1 என்று ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படம் ராகவா லாரன்ஸ் இயக்கிய முக்கிய திரைப்படங்களில் ஒன்றாகும்.

ரெபெல்: 2012ஆம் ஆண்டு நடிகர் பிரபாஸ், தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படத்தை இயக்கிய ராகவா லாரன்ஸ் இத்திரைப்படத்தின் கதாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தார். இத்திரைப்படம் கமர்சியல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில் பிரபாஸின் நடிப்பும் ராகவாலாரன்ஸின் இயக்கமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி பல தெலுங்கு திரைப்படங்களை இயக்கிய ராகவா லாரன்ஸ் தமிழில் முனி காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா திரை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் ஆரம்பமாகவுள்ளது.

Trending News