புதன்கிழமை, ஜனவரி 29, 2025

2 ஹீரோயின்களுடன் காஞ்சனா 4-க்கு தயாராகும் ராகவா மாஸ்டர்.. சுந்தர் சி-யும் போட்டிக்கு கிளம்பிடுவாரோ.!

Kanchana 4: பேய் சீசனை தொடங்கி வைத்த பெருமை ராகவா மாஸ்டருக்கு உண்டு. அவருடைய முனி படம் வெற்றி அடைந்த நிலையில் அடுத்த பார்ட் காஞ்சனாவாக வெளிவந்தது.

அதன் பிறகு காஞ்சனா 2, 3 வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அதன் அடுத்த பாகத்தை எடுக்கும் முயற்சியில் மாஸ்டர் இறங்கி இருக்கிறார்.

அதன்படி காஞ்சனா 4 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் அனைத்தும் தற்போது முடிந்து இருக்கிறது. வழக்கம்போல இப்படத்திலும் அழகான ஹீரோயின்கள் இருக்கின்றனர்.

அந்த வரிசையில் தளபதியின் ஹீரோயினான பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நாயகி நோரா ஃபதேஹி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

காஞ்சனா 4-க்கு தயாராகும் ராகவா மாஸ்டர்

விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில் திகில் பட பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். கடந்த வருடம் சுந்தர் சி யின் அரண்மனை 4 வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து இந்த வருடம் ராகவா மாஸ்டர் களம் இறங்கி இருக்கிறார். விரைவில் சுந்தர் சி அரண்மனை 5 பட வேலைகளை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆக மொத்தம் இவர்களுடைய பேய் சீரிஸ் இப்போது முடிவுக்கு வராது. வழக்கம் போல இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அரண்மனையில் காஞ்சனா, காஞ்சமனை என ஏதாவது ஒரு படம் எடுங்கள் என நெட்டிசன்கள் ஜாலி கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Trending News