வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஓவர் சந்தோஷத்தில் இருக்கும் ராகவா லாரன்ஸ்.. கல்லா நிரம்பியதால் சம்பவம் செய்யப் போகும் ஜிகர்தண்டா சீசர்

Raghava Lawrence is over happy: ராகவா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய தோல்வி படமாக ரசிகர்களிடமிருந்து மொக்கை வாங்கியது. இதனால் ரஜினியின் பெயரை டேமேஜ் பண்ணியதாகவும், வேட்டையின் கதாபாத்திரத்தில் ராகவாவை பார்க்கும் பொழுது காமெடியாகவும் தான் இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதனால் இந்த விஷயத்தை அதிரடியாக மாற்ற வேண்டும் என்று வெளிவந்த படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் எதிர்பார்த்ததை விட டபுள் மடங்கு ஹிட் ஆகி பெரிய லாபத்தை கொடுத்து விட்டது. அத்துடன் ராகவாவிற்கு சினிமாவில் மறுபடியும் மார்க்கெட் உயர ஆரம்பித்து விட்டது. இந்த படத்தை பார்த்து ரஜினி கூட இவரை கூப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.

இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை தேடிக்கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியால் கைக்கு மீறி ராகவா நல்லாவே சம்பாதித்து விட்டார். அதனால் ஓவர் சந்தோஷத்தில் தற்போது அடுத்த சம்பவத்தை செய்வதற்கு தயாராகி விட்டார். அதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்காக பாண்டிச்சேரிக்கு போய் இருக்கிறார்.

Also read: சொந்த செலவில் சூனியம் வைத்த ராகவா மாஸ்டர்.. ஆணவத்தின் உச்சத்தில் ஆடும் ரத்த சொந்தம்

பாண்டிச்சேரி என்றாலே தவறாக நினைக்க வேண்டாம். அங்கே தனியாக ரூம் எடுத்து அடுத்த படத்திற்கான விஷயத்தை ரிலாக்ஸாக யோசித்துக் கொண்டு வருகிறார். ஏனென்றால் இந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அடுத்த படம் ஒரு ஹிட்டாக கொடுத்தால் மட்டுமே மக்களிடம் நிலைத்து நிற்க முடியும் என்பதினால்.

அந்த வகையில் ராகவாவின் பேய் மற்றும் காமெடி கலந்த காஞ்சனா படத்தை கையில் எடுப்பதற்கு தயாராகி விட்டார். தற்போது இதற்கான கதை எழுதும் நோக்கத்தில் முழுவதுமாக இறங்கி விட்டார். இன்னும் கூடிய விரைவில் அடுத்த படத்திற்கான சம்பவத்தை தயார் செய்ய போகிறார்.

Also read: இருக்கிறத விட்டுட்டு பறக்குது ஆசை பட்ட ராகவா லாரன்ஸ்.. 5 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் விழும் மரண அடி

Trending News