ஒரு காலத்தில் பேய் படம் என்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது மாதத்திற்கு ஒன்று என்று வந்துகொண்டிருந்தது. அந்த முறையை மாற்றி பேய் படத்திற்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வாரத்திற்கு ஒன்று வந்தால் கூட நாங்கள் பார்ப்போம் என்று சொல்லும் அளவிற்கு ஒரு கூட்டத்தைக் கூட்டி வைத்திருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். முனி என்ற ஒரு படத்தை எடுத்து அதன் பிறகு வரிசையாக அதே பெயரில் அதே டெம்ப்ளேட்டில் தொடர்ந்து ஐந்து படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் பேய் படத்திற்கென ஒரு புது ரூட்டை போட்டுக் கொடுத்திருக்கிறார்.
அடுத்து ராகவா லாரன்ஸ் எந்த படம் நடித்தாலும் நம் மனதில் தோன்றுவது அது நிச்சயம் பேய் படமாகத்தான் இருக்கும் என்று தோன்ற வைத்துவிட்டார். இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் சென்றால் சலிப்பு தட்டிவிடும். அப்படி இவர் எடுத்த கடைசி இரண்டுப்படங்கள் எப்பா போதும்பா சாமி..! விட்ருப்பா..!என்று சொல்லும் அளவிற்கு படு மோசமாக இருந்தது. படத்தில் ஒரு சில காட்சிகளில் பயமாக இருக்கலாம், படமே பயமாக ஆக இருந்தால் நாங்கள் என்ன செய்வது என்று திரையரங்கை விட்டு வெளியே ஓடி வந்தவர்கள் கூட இருக்கின்றனர்.
இப்படி இருக்கும் போது, கண்டிப்பாக அடுத்த படம் வெயிட்டாக பக்காவாக வரவேண்டுமென்று ராகவா லாரன்ஸ் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில்தான் இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸின் நடிப்பில் ருத்ரன் எனும் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது எனும் செய்தி வந்தது.
இது வழக்கமான ஆக்க்ஷன், காமெடி, சென்டிமென்ட் நிறைந்த ஒரு குடும்பப் படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறி இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரியா பவானி சங்கருக்கும், ராகவா லாரன்ஸ்க்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி வருகிறதாம். படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்றும் நிச்சயம் ராகவா லாரன்ஸ் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காகவும் ருத்ரன் படத்தின் ஒவ்வொரு சீனையும் இயக்குனர் செதுக்கிக் கொண்டிருக்க்கிறாராம்.
கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடியும் நிலையில் உள்ள இந்த படத்தில் முழு அர்ப்பணிப்போடு பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறாராம். இதோடு சேர்த்து இந்த படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் போன்றவர்கள் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
ராகவா லாரன்ஸ் பல படங்களில் இதுபோன்ற கதைக்களத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். இயக்குனர் கதிர் மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் நூறு சதவீதம் திருப்தி அடைந்தால் மட்டுமே ஒரு சீன் ஓகே ஆகிறதாம். அந்த அளவிற்கு படத்தை மெருகேற்றி வருகின்றனர் படக்குழு கடைசியாக எஸ்ஜே சூர்யா நடித்து இருந்தார் அவருக்கு வயது 53. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வந்தால் தான் இந்த படம் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரியும்.