செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

எப்புட்றா! காஞ்சனா படத்தின் அட்ட காப்பிதான் ருத்ரனா? தம்மு, தண்ணி, கஞ்சா விட போதை எது தெரியுமா?

ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதில் இவர் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

கதிரேசன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான பாடாத பாட்டெல்லாம் என்ற பாடல் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ட்ரெய்லர் காஞ்சனா பட சாயலில் இருப்பது தான் முக்கிய காரணம்.

Also read: அதிகமாய் செகண்ட் பார்ட் நடித்த 5 ஹீரோக்கள்.. அரைச்ச மாவையே அரைத்த ராகவா லாரன்ஸ்

சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேல் வெளியாகி உள்ள இந்த ட்ரெய்லரிலேயே மொத்த பட கதையையும் நம்மால் யூகிக்க முடிகிறது. அந்த வகையில் இது ஒரு பழிவாங்கும் கதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. லவ்வர் பாயாக காதலித்து திருமணம் செய்து மனைவியுடன் வாழும் ராகவா லாரன்ஸ் வில்லன் சரத்குமாரால் பாதிக்கப்படுவது போல் காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் தம்மு, தண்ணி, கஞ்சா எல்லாத்தையும் விட பெரிய போதை எது தெரியுமா? பணம் என்று ஆக்ரோஷமாக கர்ஜிக்கும் சரத்குமார் வில்லத்தனத்தில் மிரள வைக்கிறார். அதைத்தொடர்ந்து பேய் பிடித்தவர் போல் எதிரிகளை பந்தாடும் ராகவா லாரன்ஸ், பஞ்ச் டயலாக் பேசும் சரத்குமார் என ஒவ்வொரு காட்சிகளும் காஞ்சனா படத்தையே நினைவூட்டுகிறது.

Also read: குருவை மிஞ்சிய சிஷ்யன்.. ரஜினியை முந்தி தயாரிப்பாளருக்காக ஓடி வந்த ராகவா லாரன்ஸ்

இருப்பினும் ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் ரசிக்கும் வகையிலேயே இருக்கிறது. இவ்வாறு ட்ரெய்லரே மொத்த படத்தையும் பார்த்த உணர்வை நமக்கு கொடுத்து விடுகிறது. இதனாலேயே இப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பும் தற்போது காத்து போன பலூன் போல் ஆகி இருக்கிறது. அந்த வகையில் இந்த ருத்ரன் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்பதை படம் வெளிவந்தால் தான் தெரிந்து கொள்ள முடியும்.

Trending News