ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

Jigarthanda 2 Teaser: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா காம்போவில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள டீசரே வேற லெவலில் கலக்கலாக இருக்கிறது. அதிலும் இது 1975 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே கதாபாத்திரங்களின் தோற்றமும், உடையும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

Also read: சந்திரமுகி 2 முதல் ஜிகர்தண்டா 2 வரை மொத்தம் 13 படங்கள்..1000 கோடிக்கு மேல் பிசினஸில் முதலீடு செய்யும் நிறுவனம்

கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இதில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸை வைத்து படம் இயக்குவது போல் காட்டப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஸ்ப்ரிங் முடி, ரெட்ரோ கால ட்ரஸ், மூக்கில் வளையம் என்று லாரன்ஸ் மாஸ்டர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.

அதேபோன்று பின்னணி இசையும் தாறுமாறாக இருக்கிறது. மேலும் பான் இந்தியாவை பாண்டியா என லாரன்ஸ் கூறும் அந்த வசனமும் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதையும் உணர்த்துகிறது. இவ்வாறாக கலகலப்பாகவும் மிரட்டலாகவும் வெளிவந்திருக்கிறது ஜிகர்தண்டா 2 டீசர்.

Also read: தீபாவளிக்கு ரேஸில் மோதிக் கொள்ளும் 3 டாப் ஹீரோக்கள்.. பரபரப்பாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அப்டேட்

அதிலும் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று ரிலீஸ் தேதியையும் அறிவித்து படகுழு எதிர்பார்ப்பை உயர்த்தி இருக்கின்றனர். அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ் தற்போது தன்னுடைய அடுத்த வெற்றியை பதிவு செய்வதற்கு தயாராகி இருக்கிறார்.

 

Trending News