வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பாலா போன்று மாறிய ராகவா லாரன்ஸ்.. யாரையும் அடிக்காமல் இருந்தால் சரிதான்

தமிழ் சினிமாவில் ஒரு படத்தை இயக்கும் இயக்குனர்கள் அந்தக் காட்சி தத்ரூபமாக அவர்கள் நினைத்தது போல் வரும் வரை நடிகர்களை நன்றாக வேலை வாங்குவார்கள். அதிலும் பாரதிராஜா அந்த விஷயத்தில் ரொம்பவே கண்டிப்பானவர். அவரிடம் திட்டு வாங்காத நடிகர்களே கிடையாது.

அவ்வளவு ஏன் சில நடிகைகள் அவரிடம் அடியும் வாங்கி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு பாரதிராஜா வேலையில் கண்ணும், கருத்துமாக இருப்பார். அவரைப் போன்றே தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக வலம் வரும் பாலாவும் நிறைய விஷயங்களை மெனக்கெட்டு செய்வார்.

அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தாலே நிறைய எதிர்மறையான சர்ச்சைகளில் சிக்குவார். இது பிரச்சனை, அது பிரச்சனை என்று அவர் இருக்கும் இடமே பெரிய தகராறாராக தான் இருக்கும். இப்படி பல விஷயங்களில் கண்டிப்பாக நடந்து கொள்ளும் பாலா நடிப்பில் தத்ரூபத்தை எதிர்பார்ப்பார்.

சில காட்சிகள் எடுத்து முடித்த பின்பு அது சரியாக இல்லை என்றால் நன்றாக வரும் வரை அனைவரையும் நன்றாக வேலை வாங்கி விடுவார். அது 20 நாள் சூட்டிங் என்றாலும் சரி, 200 நாள் சூட்டிங் இருந்தாலும் சரி அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் அதை அப்படியே குப்பையில் தூக்கி எறிந்து விடுவார்.

அதன் பிறகு அதே காட்சிகளை திரும்பவும் முதலில் இருந்து படமாக்குவார். அதனால்தான் அவருடைய ஒவ்வொரு படமும் பல விருதுகளை வாங்கி குவிக்கிறது. அவர் இயக்கத்தில் நடித்த நடிகர்களும் இன்று முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.

அது பாலாவை போன்றே நடிகர் ராகவா லாரன்ஸும் மாறி இருக்கிறார். அவர் தற்போது துர்கா என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். திரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு மற்றும் அறிவு இருவரும் இயக்கி வருகின்றனர். அவர்களுக்கு பின்னணியில் ராகவா லாரன்ஸும் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு தயாரிப்பாளராக அவர் இந்தப் படத்தின் 18 நாள் ஷூட்டிங்கில் நடந்த காட்சிகளை பார்த்து இருக்கிறார்.

ஆனால் அவை அனைத்தும் அவருக்கு திருப்தி தராமல் போகவே அத்தனை காட்சிகளையும் வேண்டாம் என்று ஒதுக்கி இருக்கிறார். அந்த காட்சிகளை இன்னும் தத்ரூபமாக எடுக்க வேண்டும் அவர் விரும்பியதால் தற்போது அந்த காட்சிகள் அனைத்தும் ரீ ஷூட் செய்யப்பட்டு வருகிறது.

Trending News