டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சொந்த தம்பியையும் இப்போது சினிமாவில் நுழைத்து விட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸின் தம்பி எட்வின் நடிக்கும் முதல் திரைப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியிருக்கிறது.
பவர்ஃபுல்லாக இருக்கும் இந்த புதிய படத்தின் கூட்டணி தற்போது சோசியல் மீடியாவில் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. எட்வின் நடிக்கும் முதல் படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த டைரி படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்குகிறார். அதேபோல இந்த படத்தை ஆடுகளம், பொல்லாதவன், ஜிகர்தண்டா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.
Also Read: டான்ஸ் மாஸ்டராக வந்து ஹீரோவாக மாறிய 5 நடிகர்கள்.. புதுசாக ஹீரோக்கு ரூட்டு விடும் சாண்டி
மேலும் எட்வின் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே நடனம், சண்டை பயிற்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்று, அண்ணனைப் போலவே தமிழ் சினிமாவில் கலக்க வேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விறுவிறுப்பான ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும்.
இந்த படத்தில் எட்வினுக்கு கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் நடிக்கிறார். இவர்களுடன் ஆர் சுந்தர்ராஜன், சாம்ஸ், சிவா சாரா, கேபிஒய் வினோத், விஜே தணிகை, சென்ராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு டிமான்டி காலனி, டைரி உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.
ராகவா லாரன்ஸின் சொந்த தம்பி

Also Read: சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் எல்லாம் ஓரமா போங்க.. பேய் பட சீசனை தொடங்கி வைக்க போகும் படம்
இந்த படம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும் இந்த படம் இயக்குனர் இன்னாசி பாண்டியனின் முதல் படமாக இருக்க வேண்டியதாம். ஆனால் சில காரணங்களால் டைரி படத்தை முடித்துவிட்டு இரண்டாவது படமாக தற்போது இந்த படத்தை இயக்குகிறார்.
எனவே பல பிரபலங்கள் இணைந்த இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் தனது தம்பி எட்வின் உடன் இணைந்து அவரை சினிமாவில் தூக்கி விட பார்க்கிறார். எட்வினை பார்க்கும்போது பாண்டி படத்தில் நடித்த போது ராகவா லாரன்ஸ் எப்படி இருந்தாரோ, அப்படியே அச்சு அசல் இருப்பதால் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோவாக என்ட்ரி கொடுத்த ராகவா லாரன்ஸின் சொந்த தம்பி

Also Read: ராகவா லாரன்சுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி பாலா.. 5 வருட கனவை நனவாக்கிய புகைப்படம்