Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், மாயா நினைத்தபடி ஜானகி மற்றும் ரகுராமின் 25 வது கல்யாண விழா சிறப்பாக முடிந்து விட்டது. இதை தடுக்க வேண்டும் என்று நினைத்து ரகுராம் வீட்டுக்கு வந்து புவனேஸ்வரி பிரச்சினை பண்ணினார். ஆனால் ரகுராம் உனக்கு இங்கே வந்து பிரச்சனை பண்ண எந்த உரிமையும் இல்லை, வீட்டை விட்டு வெளியே போ என்று அனுப்பிவிட்டார்.
இதை பார்த்த மாயா, புவனேஸ்வரி பிரச்சனை பண்ணியதும் குடும்பத்தையும் பெரியம்மாவையும் விட்டுக் கொடுக்காமல் பேசியது பெரியப்பாவின் மனசு மாறிவிட்டது போல் இருக்கிறது என்று சொல்கிறார். ஆனால் ரகுராம் நான் யாரையும் மன்னிக்கவும் மறக்கவும் தயாராக இல்லை. அதே நேரத்தில் என் வீட்டில் வந்து பிரச்சனை பண்ணுவதற்கு புவனேஸ்வரிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதற்காக மட்டும்தான் நான் அப்படி நடந்து கொண்டேன்.
மத்தபடி எனக்கு இந்த கல்யாண விழாவில் எந்தவித திருப்தியும் இல்லை என்று சொல்லி போய் விடுகிறார். இதனை தொடர்ந்து மாயவையும் சீனுவையும் ஒன்று சேர்க்க மாமனார் இவர்கள் இரண்டு பேருக்கும் சாந்தி முகூர்த்தத்தை ஏற்பாடு பண்ணிவிட்டார். இதை பார்த்து பத்மா தடுக்க வேண்டும் என்று சீனுவை கூப்பிட்டு பேசுகிறார். ஆனால் சீனு யார் என்ன செஞ்சாலும் எனக்கு மாயா மீது இருக்கும் கோபம் போகாது, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று போய்விடுகிறார்.
பிறகு மாயாவும் சீனு மனசை மாற்றுவதற்கு முயற்சி எடுக்கிறார். இருந்தாலும் தனத்தின் வாழ்க்கை இப்பொழுது கேள்விக்குறியாக இருப்பதற்கு காரணம் நீ தான். அந்த கதிரும் இந்த வீட்டிலேயே இருப்பதற்கு காரணமும் நீதான். அதனால் உன்னை என்னால் மன்னிக்கவே முடியாது என்று கோபப்பட ஆரம்பித்து விட்டார்.
அடுத்ததாக தனத்திற்கு பாஸ்போர்ட் வந்துவிட்டது என்று ரகுராமிடம் வந்து கொடுக்கிறார். அந்த பாஸ்போர்ட் பார்த்தது ஆத்திரமடைந்த ரகுராம், தனம் ரகுராம் என்று தான் இருக்க வேண்டும். யாரை கேட்டு தனம் கதிரவன் என்ற பெயரை சேர்த்து இருக்கு என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அப்பொழுது அந்த ஆபிஸர் பெண்களுக்கு கல்யாணம் ஆன பிறகு பாஸ்போர்ட்டில் பெயருக்கு பின்னாடி கணவர் பெயர் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்கு ரகுராம் அப்படி ஒரு அவசியமே இல்லாத அளவிற்கு நான் மாத்தி காட்டுகிறேன் என்று சொல்லி கதிரிடமிருந்து தனத்தை பிரிப்பதற்கு சவால் விட்டுவிட்டார். நடந்த உண்மையை ரகுராமிடம் சொல்லாமல் மறைக்கும் வரை இப்படித்தான் ரகுராம் ருத்ரதாண்டவம் ஆடுவார். இதைப் புரிந்து கொள்ளாத ஜானகி மற்றும் மாயா உண்மையை மூடி மறைத்து வருகிறார்கள். இதனால் ஆக்ரோஷத்தில் இருக்கும் ரகுராம், தனத்திடமிருந்து கதிரை பிரிப்பதற்கு முயற்சி எடுக்கப் போகிறார்.