தொலைக்காட்சி

சந்தியா ராகம் சீரியலில் கதிரை சீண்டிப் பார்த்த ரகுராம்.. தனத்தால் கிடைக்கும் உதவி

By · 30 ஜூன் 2025 · Updated 30 ஜூன் 2025
sandhiya ragam (1)

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், புகுந்த வீட்டில் என்னதான் மகாராணி மாதிரி தனம் வாழ்ந்து வந்தாலும் புடிச்சவன் கூட அன்பான ஒரு உறவு கிடைக்கும் பொழுது எல்லாத்தையும் மறந்து கணவருக்காக வாழும் வாழ்க்கை தான் நிதர்சனமானது என்பதை புரிந்து கொண்டு தனம், கதிருடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ஆனால் இது புரிந்து கொள்ளாத ரகுராம், வீடு வீடாக சிலிண்டர் போடும் கதிரை அவமானப்படுத்தும் விதமாக என் மகள் என்னுடைய வீட்டில் ராணி மாதிரி வாழ்ந்தால், ஆனால் உன்னை நம்பி வந்த பிறகு அவளுக்கு கிடைக்க வேண்டிய சந்தோஷம் எதுவும் கிடைக்கவில்லை. உன்னால் என்ன வாங்கிக் கொடுக்க முடியும் என்று அனைவரையும் முன்னாடியும் அவமானப்படுத்தி பேசி தன்மானத்தையும் சீண்டி விட்டார்.

இதனால் மனம் உடைந்து போன கதிர், தனத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக தனக்கு இன்னொரு நிரந்தரமான வேலை வேண்டும் என்பதால் சிலிண்டர் போடும் ஏஜென்சியை எடுத்துக் கொள்ளலாம் என்று பிளான் பண்ணி விட்டார். ஆனால் அதற்காக அட்வான்ஸ் தொகையாக 5 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று அந்த நபர் கதிரிடம் சொல்லிவிடுகிறார்.

இதை மறைந்திருந்து கேட்ட தனம், தன்னுடைய புருஷனுக்கு தன்னால் முடிந்த ஏதாவது உதவி பண்ண வேண்டும் என்று பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொண்டால் 5 லட்ச ரூபாய் ஸ்பான்சர் மூலம் கிடைக்கும் என்பதால் தனம் டீலுக்கு ஒத்துக்கொண்டு பணத்தை பெறுகிறார். இந்த பணத்தை கதிரிடம் கொடுத்து ஏஜென்சி ஆரம்பிப்பதற்கு முடிவாகிவிட்டது.

இந்த விஷயம் ரகுராமுக்கு தெரிந்த நிலையில் அந்த கடையை ஓபன் பண்ண சொல்லி ராகுராமுக்கு அழைப்பு வருகிறது. உடனே ரகுராம் இதை சந்தோஷமாக எடுத்துக்கொண்டு வெளியே காட்டாமல் இருக்கிறார். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக கதிர் வாழ்க்கையில் முன்னேறி தனத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துவார். ரகுராமும் தனக்கேற்ற மருமகன் என்று தூக்கிக் கொண்டாடப் போகிறார்.