வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சந்தியா ராகம் சீரியலில் ஜானகியை அடக்க ரகுராம் எடுத்த முடிவு.. மாயாவிற்காக எதற்கும் துணிய தயாரான பெரியம்மா

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில், ரகுராமுக்கு மாயா மீது இருக்கும் கோபத்தினால் வீட்டிற்குள் பத்மாவை அனுமதிக்கவில்லை. அத்துடன் சீனுவை கூட்டிட்டு வீட்டை விட்டு வெளியே போ என்று ரகுராம் சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான பத்மா, உங்களுக்கு மாயா மீது கோபம் என்றால் என்னையே ஏன் வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று கேட்கிறார்.

அதற்கு ரகுராம், கட்டின பொண்டாட்டி தான் வேணும் என்று எல்லாரும் முன்னாடியும் உன் பையன் தானே சொன்னான். அதனால் என் கண் முன்னாடி யாரும் இல்லாமல் எல்லாத்தையும் கூட்டிட்டு வெளியே போய்விடு என்று கோபப்படுகிறார். ஆனால் இதை தடுக்கும் முயற்சியில் ஜானகி, மாயா இங்கேதான் என் கூட இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

உடனே ரகுராம் என் பேச்சுக்கு இத்தனை வருஷமா கட்டுப்பட்டு இருந்தது போல், இப்பவும் என்னுடைய முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று ஜானகியை அடக்கும் விதமாக ரகுராமின் ஆணவப் பேச்சு இருந்தது. ஆனால் மாயா எதற்காக செய்தார் என்ற காரணம் ஜானகிக்கு தெரிந்ததால் ரகுராமை எதிர்த்து பேசும் விதமாக உங்க பேச்சை என்னால் கேட்க முடியாது என்று கூறி விடுகிறார்.

அப்படி என்றால் என்னுடைய மனைவி செத்துப் போயிட்டாள் என்று நான் நினைத்துக் கொள்கிறேன் என்று தலையில் தண்ணீர் ஊற்றி தலைமுழுகி விடுகிறார். ஆனால் இத்தனை வருஷமாக வாழ்ந்த மனைவி தற்போது எடுத்திருக்கும் முடிவு மீது நம்பிக்கை இல்லாமல் ரகுராம் செய்த காரியம் அதிர்ச்சியாக இருக்கிறது.

சுயமாக யாரும் முடிவெடுக்க கூடாது நான் சொல்வது தான் கேட்க வேண்டும் என்று ஆணாதிக்க திமிரையும், கணவன் என்கிற அகங்காரத்தையும் காட்டும் விதமாக ரகுராம் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார். என் வாழ்க்கை என்ன ஆனாலும் பரவாயில்லை என்னுடைய பிள்ளைகளையும் மாயாவையும் நான் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜானகி, மாயாவிற்காக எதையும் செய்ய துணிந்து விட்டார்.

அதனால் ஜானகி, மாயாவை கூட்டிட்டு வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் கதிருடன் சேர்ந்து வாழ்வதாக சொன்ன தனமும் கதிர் உடன் வெளியே போகும் விதமாக அனைவரும் சேர்ந்து தனியாக இருக்கப் போகிறார்கள். இப்படி இரண்டு குடும்பமாக பிரிந்த இந்த ஒரு தருணத்தில் புவனேஸ்வரி ஏதாவது சூழ்ச்சி பண்ணி ரகுராம் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

Trending News