புதன்கிழமை, ஜனவரி 15, 2025

31 ஆண்டுகளுக்கு முன் உலுக்கிய உண்மை.. ரகுவரனின் மனைவியுடன் மீண்டும் மனதை ரணமாக்க வரும் செங்கேணி

Raghuvaran: இப்போது இயக்குனர்கள் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகம் படம் எடுத்து வருகிறார்கள். ஆகையால் 31 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ரகுவரனின் மனைவி ரோகினி ஒரு படம் எடுக்க இருக்கிறார்.

அதாவது டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடிப்பில் ஜெய் பீம் படம் வெளியானது. 1993 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் வெளியான நிலையில் மனதை ரணமாக்கியது. இந்த சூழலில் இப்போது ரோகினியும் தமிழ்நாட்டில் நடந்த கொடூர சம்பவத்தை படமாக எடுக்க இருக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர் என்ற ஊருக்கு பக்கத்தில் பழங்குடியினர் வாழும் வாச்சாத்தி என்ற கிராமத்தில் வசித்து வந்தனர். 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த கிராமத்திற்குள் வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையிதுறையினர் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடியாக சோதனை நடத்தி இருந்தனர்.

அப்போது அந்த கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரையும் பெரிய ஆல மரத்தின் கீழே கொண்டுவந்து கொடுமையாக நடத்தி அடித்துள்ளனர். அதில் 18 பெண்களை அருகில் உள்ள வனத்துறைக்கு அழைத்துச் சென்று பலவந்தப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த கொடுமை சம்பவத்தில் 34 உயிரிழந்துள்ளனர்.

இதில் 28 குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தின் அடிப்படையில் 269 குற்றவாளிகளில் தற்போது உயிரோடு உள்ள 215 குற்றவாளிகளுக்கு மட்டும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பெண்களை பலவந்தப்படுத்திய 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை போடப்பட்டது.

மேலும் ரவி தம்பி என்பவர் 2012 ஆம் ஆண்டு வாச்சாத்தி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் இப்போது ரோகினி இந்த படத்தை கையில் எடுத்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் போது குரல் கொடுக்கும் ரோகிணி இந்த படத்தை எடுக்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் லிஜோமோல் ஜோஸ் செங்கேணியை மிஞ்சும் அளவுக்கு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Trending News