செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

காவேரி வாழ்க்கையில் சூனியம் வைக்க ராகினிக்கு கிடைத்த ஆதாரம்.. விஜய் வீட்டுக்கு வரப்போகும் வெண்ணிலா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரியை விட்டு பிரிய கூடாது என்று விஜய் முடிவு எடுத்து விட்டார். ஒப்பந்தத்தின்படி கல்யாணம் பண்ணி இருந்தாலும், விஜய் மனதிற்குள் காவேரி இடம் பிடித்து விட்டார். அதே மாதிரி காவேரி மனசிலும் விஜய் தான் இருக்கிறார். ஆனால் இடையில் நவீன் மற்றும் யமுனா செய்த குளறுபடியால் காவேரி கொஞ்சம் கொஞ்சமாக விஜய் விட்டு விலக ஆரம்பித்து விட்டார்.

இது எதுவும் தெரியாத விஜய், காவேரிக்கும் யமுனாவுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை அதனால்தான் காவேரி டல்லாக இருக்கிறார் என்று புரிந்து கொண்டார். அந்த வகையில் எப்படியாவது காவிரி மனதை மாற்றி பழையபடி சந்தோசமாக இருக்க வைக்க வேண்டும் என்று ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் பிடிச்சா சாப்பாடுகளை வாங்கி கொடுத்து டைவர்ட் பண்ணுகிறார்.

வெண்ணிலாவை பார்த்து அதிர்ச்சியாக போகும் விஜய்

அப்பொழுது கூட காவேரி, பிரிய போற நேரத்தில் ஏன் ஓவராக கரிசனம் காட்டுகிறீர்கள். நான் எதுவும் தப்பாக நினைக்க மாட்டேன், எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன் சுமுகமாக பிரிந்துவிடலாம் கவலைப்படாதீர்கள் என்று விஜய் மனது கஷ்டப்படும்படி சொல்கிறார். இதைக் கேட்டு கடுப்பான விஜய், வாயை திறந்தாலே ஒப்பந்தம் கல்யாணம் என்று பேசி நோகடிக்கிறாள் என்று நொந்து கொள்கிறார்.

இதற்கிடையில் அஜய் மற்றும் ராகினி காரில் போய்க்கொண்டிருக்கும் போது எதர்ச்சியாக வெண்ணிலாவை அஜய் பார்க்கிறார். அப்பொழுது இந்த பொண்ணுதான் விஜய் அண்ணனின் முன்னாள் காதலி என்று சொல்கிறார். வெண்ணிலாவும் விஜய்யும் ரொம்பவே சின்சியராக காதலித்து ஒன்றாக வாழ்க்கை வாழனும் என்று கனவு கோட்டை கட்டி வந்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தற்போது காவேரி குடும்பம் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் தான் வெண்ணிலா குடும்பம் தங்கி இருந்தார்கள். ஆனால் திடீரென்று என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை வெண்ணிலா பற்றி தகவல் எதுவும் தெரியாமல் போய்விட்டது. இதனால் அண்ணன் நொந்து போய் இருக்கும் பொழுது தான் தாத்தா மற்றும் பாட்டி கல்யாணத்தை பண்ண சொல்லி வற்புறுத்தினார்கள்.

அந்த சமயத்தில் விஜய் அண்ணனுக்கு வேறு வழி இல்லாததால் காவிரியை கல்யாணம் பண்ணிக் கொண்டார். ஆனாலும் இப்பொழுது வரை வெண்ணிலாவே நினைத்துக் கொண்டு தனியாக பீல் பண்ணி பேசிக் கொண்டிருப்பது நான் கவனித்து இருக்கிறேன் என்று அஜய் சொல்கிறார். இதை கேட்டதும் ராகினிக்கு, இந்த வெண்ணிலாவை எப்படியாவது தேடிப் பிடித்து விஜய் முன்னாடி கொண்டு வந்து விட்டால் காவேரி சந்தோஷத்திற்கு கண்டிப்பாக பிரச்சினை வரும் என்று பிளான் பண்ணி விட்டார்.

அந்த வகையில் ராகினி, மாமனார், அப்பா மற்றும் அஜய் அனைவரும் சேர்ந்து வெண்ணிலாவை தேடி கண்டுபிடிக்கும் விதமாக ஒவ்வொரு பக்கமும் அலைய ஆரம்பித்து விட்டார்கள். இதை வைத்து காவிரி வாழ்க்கையில் குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று ராகினி சந்தோசப்பட்டு வெண்ணிலாவை கண்டுபிடித்து விஜய் வீட்டிற்கு கூட்டிட்டு வரப்போகிறார்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News