Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவை பழைய மாதிரி பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் விஜய் சில விஷயங்களை ஞாபகப்படுத்தி பேசுகிறார். இதை பார்த்த காவேரி தூரத்தில் நின்னு அழுது கண்ணீர் வடிக்கிறார். காவேரி அழுவதை பார்த்து ராகினி ரசித்து சிரித்துக்கொள்கிறார். இதுதான் நான் எதிர்பார்த்தேன் எனக்கு வேண்டியது கிடைத்துவிட்டது என்பதற்கு ஏற்ப ராகினி சந்தோசப்பட்டுக் கொள்கிறார்.
பிறகு விஜய், வெண்ணிலாவுடன் பேசிக் கொண்டிருப்பதால் அதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத காவிரி, அம்மா வீட்டிற்கு போய்விடுகிறார். அங்கே போனதும் அம்மா மற்றும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் மனது விட்டு பேசுகிறார். பிறகு நான் இன்று இங்கே இருந்து கொள்கிறேன் என்று சொல்லிய நிலையில் கங்கா அதெல்லாம் முடியாது ஒழுங்கு மரியாதையாய் உன் வீட்டுக்குப் போ.
வெண்ணிலாவை அங்கே விட்டுவிட்டு நீ இங்கே வந்து தூங்குவது சரியாக இருக்காது என்று அட்வைஸ் பண்ணுகிறார். அத்துடன் காவேரியின் அம்மா காவேரியின் மனநிலை புரிந்து கொண்டு ஆறுதல் சொல்லி சாப்பாடு ஊட்டி விட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பிறகு வீட்டிற்கு வரும் காவேரியை வழிமறித்து ராகினி பேசுகிறார். இனி உன்னுடைய வாழ்க்கை அதோ கெதி தான்.
பார்த்தல்ல வெண்ணிலா வெண்ணிலா என்று விஜய் உருகி உருகி பேசுவதை, இனி உன்னிடம் வந்து எனக்கு வெண்ணிலா தான் முக்கியம் நீ என் வாழ்க்கையை விட்டு போய்விடு என சொல்லப் போகிறார். நீயும் வேறு வழி இல்லாமல் இந்த வீட்டை விட்டு போய்விடுவாய். இதுதான் உன்னுடைய தலையெழுத்து என்று காவிரியை சீண்டிப் பார்க்கும் அளவிற்கு வார்த்தைகளால் பேசி காயப்படுத்துகிறார்.
பிறகு வீட்டிற்குள் போன காவேரி, விஜய் வெண்ணிலாவை நினைத்து பீல் பண்ணுவதை பார்த்து எதுவும் பேசாமல் ரூம்குள் போய்விடுகிறார். ஆனால் இது எல்லாத்தையும் பார்த்த தாத்தா, விஜய்யிடம் தனியாக பேசுகிறார். காவிரி, வெண்ணிலா வந்ததற்கு பிறகு கொஞ்சம் பயத்துடன் இருக்கிறார். நீ என்ன முடிவு எடுக்கப் போகிறாய் என்று கேட்கிறார்.
அதற்கு விஜய், காவிரிக்கு என்மீது நிறைய நம்பிக்கை இருக்கிறது. அதனால் தான் வெண்ணிலாவை வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய வாழ்க்கையிலையும் சரி, மனசிலையும் சரி எப்பொழுதுமே காவேரி மட்டும்தான் இருப்பாள். ஆனால் அதற்காக வெண்ணிலாவை நான் அப்படியே விட்டு விட முடியாது. எப்படி இருந்த வெண்ணிலா இந்த நிலைமையில் இருப்பதற்கு நானும் ஒரு காரணம்.
அந்த குற்ற உணர்ச்சியில் நான் ரொம்ப வருத்தமாக இருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே தாத்தா நான் இதற்கு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு ஐடியா கொடுக்கிறேன் என்று சொல்லி வெண்ணிலாவை ஒரு நல்ல ஹாஸ்பிடலில் சேர்த்து நாம் ட்ரீட்மென்ட் பார்த்துக் கொள்வோம். அவ்வப்போது நாமும் பார்த்து பேசிட்டு வரலாம் என்று சொல்கிறார். ஆனால் விஜய் அப்படி எல்லாம் யாரோ மாதிரி என்னால் விட்டு விட முடியாது.
வெண்ணிலா குணமாகும் வரை நான் கூடவே இருந்து பார்க்கணும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய மனைவியாகவும் காதலியாகவும் எப்பொழுதும் காவிரி தான் எனக்கு ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் என்று சொல்கிறார். ஆனால் இந்த விஷயத்தை நேரடியாக காவிரியிடம் விஜய் சொல்லாமல் லெட்டர் மூலமாக எழுதி வைத்துவிட்டு வெண்ணிலவை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார்.
இந்த லெட்டரை ராகினி பார்த்த நிலையில் காவிரி பார்த்து விடக்கூடாது என்பதற்காக அந்த லெட்டரை கிழித்து தூர போட்டு விடுகிறார். இதனால் விஜய்யை தவறாக புரிந்து கொண்ட காவேரி ஒவ்வொரு நாளும் கண்ணீர் விட்டு அழப்போகிறார். இருந்தாலும் விஜய் அவருடைய மனதில் என்ன இருக்கு என்று தெளிவுபடுத்தும் விதமாக காவிரியிடம் உண்மையை சொல்லிவிட்டால் ராகினி முகத்தில் கரியை பூசி விடலாம்.