புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காவேரியை சீண்டிய ராகினி.. விஜய் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் தலைதெரித்து ஓடிய குள்ளநரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி தன்னிடம் மாட்டிக் கொண்டதால் இனி அவளை வச்சு செய்யலாம் என்று பசுபதி மற்றும் ராகினியும் தப்பு கணக்கு போட்டு விட்டார்கள். அதன்படி அஜய்யை பகடைகாயாக பயன்படுத்தி கல்யாணம் பண்ணி தற்போது காவேரியை பழிவாங்க விஜய் வீட்டுக்கு குடும்பத்துடன் வருகிறார்கள்.

ஆனால் வந்ததும், வெளியே தனியாக நின்று கொண்டிருந்த காவேரியை பார்த்த பசுபதி, ராகினி, அஜய் மற்றும் இவருடைய அப்பா அனைவரும் சேர்ந்து கலாய்க்கிறார்கள். இதை பார்த்துக் கொண்டிருந்த யமுனா, வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லியதும் மொத்த குடும்பமும் சேர்ந்து பசுபதிக்கு ஆப்பு வச்சு விட்டார்கள்.

விஜய் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

இதனால் அங்கு ஒரு போர்க்களமாக ஆகிய நிலையில் விஜய் மாஸாக என்டரி கொடுத்து பசுபதியை வெளியே அனுப்பி விட்டார். இதனை பார்த்த அஜய் அப்பா, எங்களுக்கு மரியாதை இல்லாத இந்த குடும்பத்தில் இனி நாங்கள் இருக்க மாட்டோம் என்று வீர வசனமாக பேசினார். இதனை எல்லாம் கேட்ட ராகினி இந்த ஆள் என்ன நம்ம போட்ட பிளானை சொதப்பி விடுவாரு போல என்ற பயம் வந்துவிட்டது.

அதனால் நாங்கள் எங்கும் போக மாட்டோம் இங்குதான் இருப்போம் என்று ராகினி சொல்லிவிட்டார். பிறகு நீங்களா கூப்பிடும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று அஜய் அப்பா ஓவர் செண்டிமெண்டாக பேசி விஜய்யின் சித்தியும் கூட்டி வெளியே போய்விட்டார். பிறகு அசிங்கப்பட்ட ராகினி, அஜய்யை கூட்டிட்டு வீட்டிற்குள் நுழைகிறார்.

நுழைந்ததும் தான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை அப்பாவும் இந்த வீட்டிற்கு வர முடியாத சூழ்நிலை ஆகிவிட்டது என்று புலம்பி கொண்டிருக்கிறார். பிறகு அந்த வழியாக வந்த காவிரியை வம்பு இழுக்கும் விதமாக உன்னை இந்த வீட்ல இருந்து எப்படி துரத்துறேன்னு பாரு. இனி ஒவ்வொரு நாளும் என்னிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறாய் என்று பல விஷயங்களை சொல்லி சீண்டுகிறார்.

இதனைப் பார்த்த விஜய், அஜய்யை கூப்பிட்டு கன்னத்தில் பளார் என்று இரண்டு அறை கொடுத்து இனி உன் பொண்டாட்டி எதற்காகவும் வாயை திறக்க கூடாது. முக்கியமாக என் மனைவி காவிரி இருக்கும் பக்கத்தில் கூட தலை வைத்து படுக்கக் கூடாது என்று வார்னிங் கொடுத்து திட்டுகிறார். இதனால் அரண்டு போன ராகினி எதுவும் பேச முடியாமல் வாயை மூடிக்கொண்டு தலைதெரித்து ஓடிவிட்டார்.

அத்துடன் காவேரியிடம் என்னுடைய அதிர்ச்சி வைத்தியம் எப்படி இருக்கிறது என்று கேட்டதும் காவேரி சூப்பர் பாஸ் என்று இருவரும் பாசத்தை கொட்டுகிறார்கள். ஆனால் அடிபட்ட பாம்பாக ராகினி இருப்பதால் ஏதாவது ஒரு சின்ன விஷயம் கிடைத்தால் போதும் காவிரியை சிக்கவைத்து விடலாம் என்று கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்டவருக்கு காவிரி ஒரு ஒப்பந்தத்தின் படி தான் விஜய்யை கல்யாணம் பண்ணி இருக்கிறார் என்று தெரிந்தால் இதை வைத்து இன்னும் ஏழரை கூட்டுவார். ஆனால் விஜய், காவேரி பக்கம் இருக்கும் வரை யாராலயும் எதுவும் பண்ண முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப கவச குண்டலமாக இருக்கிறார்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News