புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

நாடாளுமன்றத்தில் மோடி, அமித்ஷாவை கதறவிட்ட ராகுல் காந்தி.. உலகளவில் ட்ரெண்டாகும் சம்பவம் தெரியுமா?

Rahul Gandhi: கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் எல்லோருக்குமே இன்று வரை ஞாபகம் இருக்கும். அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் நேற்று ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் நடத்தி இருக்கிறார்.

இந்தியா கூட்டணி கட்சிகளால் மனப்பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் நாடாளுமன்ற கூட்டம். ஒட்டுமொத்த இந்தியாவே பேசும் அளவுக்கு தரமான சம்பவத்தை செய்து விட்டார் ராகுல் காந்தி.

நாடாளுமன்றத்தில் நடந்த அந்த சம்பவம்

மணிப்பூர் பிரச்சனை முதல் நீட் தேர்வு பிரச்சனை வரை தனக்கான எதிர்ப்புக் குரலை கொடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாஜகவினர் மத சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாக இருக்கிறார்கள். பாஜகவினர் வன்முறை செய்யும் இந்துக்களாக இருக்கிறார்கள் என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.

அது மட்டும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதைவிட உண்மையைப் பேசுவதே சிறந்தது. சிவனின் தோளில் இருக்கும் சூலாயுதம் என்றுமே வன்முறையை குறிக்காது என்று சுட்டிக் காட்டினார். இது எல்லாமே மோடிக்கு நன்றாக தெரியும், ஏனென்றால் மோடி தெய்வத்துடன் நேரடி தொடர்பில் இருப்பவர்.

நாமெல்லாம் பயாலஜிக்கலாக பிறந்தோம். பிரதமர் மோடி மட்டும் தான் நான் பயாலஜிக்கல் பிறந்தவர் என மோடியை வறுத்தெடுத்து விட்டார். ராகுல் காந்தி பேச ஆரம்பிக்கும்போதே கதி கலங்கி போய்விட்டார் மோடி. ஆரம்பத்திலேயே ராகுல் காந்தியை பேச விடாத அளவுக்கு மோடி இடை மறித்தார்.

அமித்ஷாவும் தன்னால் முடிந்த அளவுக்கு ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்தார். ராகுல் காந்தி பொங்கி எழுந்து மோடி மற்றும் அமித்ஷாவுக்கு மணிப்பூர் மாநிலம் கண்ணில் தெரியவில்லையா. எதற்காக அங்கே போக மறுக்கிறீர்கள்.

மணிப்பூர் மாநிலம் இந்திய நாட்டுடன் சேர்ந்தது இல்லையா என கேள்விகளை அடுக்கினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பாஜகவினர் 50 முறை அவருடைய பேச்சை தடுக்கும் வகையில் எழுந்து பேசி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் அவர் பேசிய நிறைய விஷயங்களை அவை குறிப்பேட்டிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். மேலும் ராகுல் காந்தி அயோத்தியை பற்றி பேசும்பொழுது மைக் அணைக்கப்பட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

நேற்று நாடாளுமன்றத்தில் மோடியை கதறவிட்ட ராகுல் காந்தி தற்போது இந்திய இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவரை தான் இந்தியா எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாக மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News