செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

மக்களுக்கான தலைவன் என்று மீண்டும் நிரூபித்த ராகுல்.. கோயமுத்தூரை அதிர வைத்த சம்பவம்!

Rahul Gandhi: தேர்தல் முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. தேசிய கட்சிகள் எல்லாம், தங்கள் கூட்டணி வைத்திருக்கும் மாநில கட்சிகளுடன் இணைந்து முக்கியமான இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆளும் பாஜக கட்சியின் முக்கிய புள்ளிகளான நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஏற்கனவே தமிழகத்துக்கு வருகை தந்து விட்டார்கள். இந்த முறை மோடி தமிழ்நாட்டில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார்.

இதனால்தான் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டின் நிலைமையை பொருத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சி தான் இது போன்ற தேர்தல்களில் நல்ல வாக்குகளை பெற்றிருக்கிறது.

இந்த மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் பிரச்சார க் கூட்டத்திற்கு நேற்று ராகுல் காந்தி தமிழ்நாடு வந்திருந்தார். ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி கோயம்புத்தூரில் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்.

மோடி மற்றும் அமித்ஷா வந்திருந்த போது இருந்த கூட்டத்தை விட, இந்தக் கூட்டம் ரொம்பவும் அதிகம். அது மட்டும் இல்லாமல் ராகுல் காந்தி நேற்றிலிருந்து சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறார்.

ராகுல் காந்தியின் தேர்தல் பரப்புரையை தாண்டி அவர் செய்த சில விஷயங்கள் தான் இப்போது மக்களை ஈர்த்திருக்கிறது. சாதாரணமாக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த ராகுல் காந்தி, அங்கே இருந்த டிவைடரில் எகிறி குதித்து பக்கத்தில் இருக்கும் ஸ்வீட் கடைக்கு சென்றார்.

அங்கே மைசூர் பாக் வாங்கிய ராகுல், இது என்னுடைய அண்ணன் ஸ்டாலினுக்காக என்று சொல்லி இருந்தார். மேலும் அவர் வாங்கிய பொருளுக்கு அவர் பாக்கெட்டில் இருந்தே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

அவர் வாங்கினார் அவர் தான காசு கொடுக்கணும் இதுல என்ன பெரிய விஷயம் இருக்குதுன்னு எல்லாருக்கும் தோணும். ஆனா அரசியல்ல சொந்த காசு செலவு பண்றது என்பது நடக்காத விஷயம் எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.

சாதாரணமாக உள்ளே வந்து, கடையில் இருந்த அத்தனை பேருடனும் போட்டோ எடுத்துக் கொண்டார் ராகுல் காந்தி. இதுபோன்று எளிமையாக இருக்கும் ஒருவர் தான் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று இப்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இந்த முறை காங்கிரஸ் தன்னுடைய பிரச்சாரத்தின் மைய புள்ளியாக வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மதம் சார்ந்த தீண்டாமையை முன்னெடுத்து வைத்திருக்கிறது. இருந்தாலும் ஒரு பக்கம் பாஜக அரசு கச்சத்தீவு பிரச்சனையை மீண்டும் தமிழர்களுக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறது.

நடந்து முடிந்த பிரச்சனையை மீண்டும் பேசும் பாஜக கட்சி ஜெயிக்குமா அல்லது மக்கள் திண்டாட்டத்தை முன்னெடுத்து வைக்கும் காங்கிரஸ் ஜெய்குமார் என்பது இன்னும் ஒரு சில மாதங்களில் தெரிந்து விடும்.

- Advertisement -spot_img

Trending News