திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய், சூர்யா அளவிற்கு பிசினஸில் கொட்டும் பனமழை.. தனுஷின் கேப்டன் மில்லருக்கு அடித்த ஜாக்பாட்

Dhanush In Captain Miller: நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் உணர்ச்சி ஏறும் வகையில் தனுஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ட்ரெய்லர் மற்றும் பாடல் வரிகளை கேட்கும் பொழுது உடல் முழுவதும் மெய்சிலிர்க்கும் வகையில் பூரித்துப் போய் விடுகிறது. நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும், படையா வந்தா சாவு மழை பொழியும் என்பதற்கு ஏற்ப போர்க்களத்திற்கு தயாராகிவிட்டார் தனுஷ்.

ஜிவி பிரகாஷ், தனுஷ் காம்போ எப்பொழுதுமே வெற்றியே தான் கொடுக்கும் என்பதற்கு ஏற்ப கேப்டன் மில்லர் படத்தில் இணைந்திருக்கும் இவர்கள் கூட்டணி நிச்சயம் உலகம் முழுவதும் தெறிக்க விடப் போகிறார்கள். இதுவரை தனுஷ் எத்தனையோ படங்கள் வெற்றியை கொடுத்திருந்தாலும் தற்போது இப்படத்திற்கு கிடைத்த பிசினஸ் லெவல் தனுசுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்.

அதாவது படம் ரிலீசுக்கு முன்னே 200கோடி அளவிற்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில் விஜய், சூர்யா அளவிற்கு தனுசும் இடம் பிடித்து விட்டார். இந்த ஒரு விஷயமே போதும் இவருடைய சம்பளம் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதற்கு. சும்மாவே தனுஷ் நாலா பக்கமும் ஆட்டம் ஆடுவார். இதுல இந்த ஒரு விஷயம் எல்லாம் இவருக்கு கை கொடுத்தால் இனி அடுத்த கட்ட லெவலுக்கு இறங்கி அடிக்க போகிறார்.

Also read: அஜித்திற்கு மாஸான கதையை ரெடி செய்த வெற்றிமாறன்.. வயித்தெரிச்சலில் தனுஷ், விஜய்

இப்படத்தில் சிவராஜ் குமார் தனுசுடன் இணைந்து இருக்கிறார். அத்துடன் சுந்திப் கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு போர்க்களத்தை மையமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஜெயிலர் மற்றும் லியோ படத்திற்கு பிறகு அடுத்து வசூல் சாதனைகளையும் பிரம்மாண்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் தனுஷின் கேப்டன் மில்லர் இடம் பிடிக்க போகிறது.

இதுவரை தனுஷ் நடித்த படங்கள் உலக அளவில் 100 கோடி அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றிருக்கிறது. அதில் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் பிரீ ரிலீஸ் பிசினஸ் மட்டுமே 200 கோடியை தொட்டு இருக்கிறது. இப்படம் ரிலீசுக்கு முன்னே இந்த அளவிற்கு பிசினஸை எட்டி உள்ளது கோலிவுட் சினிமாவில் உள்ள அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தனுஷ் பண மழையில் நனைந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இவருடைய அடுத்த படமான D50 படத்துக்கு தயாராகி விட்டார். இப்படத்தை இவரை இயக்கி நடிக்கப் போகிறார். அந்த வகையில் இனி தனுஷின் மார்க்கெட் லெவல் பல மடங்கு எகிற போகிறது. மேலும் கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: 2023-இல் புது முகங்களாக வசூல் வேட்டையாடிய 5 இளம் ஹீரோக்கள்.. தனுஷ் இடத்தை பிடிக்க போராடும் மோட்டார் மோகன்

Trending News