ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மூக்குத்தி அம்மன் படத்தை அட்ட காப்பியடித்த ராஜா ராணி2.. ரூம் போட்டு யோசிப்பாங்க போல

விஜய் டிவியின் ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் கடந்த வாரம் முதல் இந்த வாரமும் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனால் டிஆர்பி-யில் டல் அடித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு சீரியல்களின் ரேட்டிங்கை எகிற விடவேண்டும் என நினைத்துள்ளனர்.

அதற்காக இந்த மகா சங்கமத்தில் அதிரடி திருப்பங்களைக் கொண்டு வரவேண்டும் என்று போலிச்சாமியார், தீவிரவாதி என சந்தியாவிற்கு எதிராக இரண்டு பேரையும் இயக்குனர் இறக்கியுள்ளார். இதனால் சந்தியா தீவிரவாதி செல்வத்திடம் இருந்து பார்வதியை உயிரோடு மீட்டு விட வேண்டும்.

அத்துடன் போலிச் சாமியாரின் பித்தலாட்டத்தை ஆதாரத்துடன் மக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார். இதனால் சந்தியா போலீஸ் மூளையை கசக்கி அந்தப் போலிச் சாமியார் தன்னுடைய சீடர்களுடன் ரகசியமாக பேசும் போது, அதை வீடியோ எடுத்து மக்கள் கூடியிருக்கும் போது அந்த சாமியாருக்கு தெரியாமலே போட்டு காண்பித்து அவருடைய முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறார்.

இந்த சாமியார் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்.  தன்னுடைய தோழி சல்மாவின் இடத்தில் அவருக்கே தெரியாமல் கோயில் கட்டுவதாக மக்களிடம் பணத்தை வசூலித்து அதை ஆட்டைய போட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சாமியார் வேஷம் போட்டிருக்கிறார் என மக்களிடம் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார். இதன் பிறகு தீவிரவாதி செல்வத்திடமிருந்து சந்தியா, பார்வதியை போலீசார் உதவியுடன் உயிருடன் மீட்டு வருவார்.

இதையெல்லாம் பார்க்கும்போது நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை அப்படியே காப்பி அடித்துள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு படத்தையும் வரிசையாக அட்ட காப்பி அடித்துக் கொண்டிருக்கும் விஜய் டிவி, இந்த முறை மூக்குத்தி அம்மன் படத்தை காப்பி அடிப்பதற்காக ரூம் போட்டு யோசிப்பாங்க போல.

எனவே நயன்தாராவை மிஞ்சிய டயலாக் அடிக்கும் சந்தியா சீரியஸாக பேசும் போது கூட அவருடைய நடிப்பு அப்பட்டமாக தெரிகிறது. வரவர பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு சீரியல்களும் மோசமாக செல்வதால், அந்த இரண்டு சீரியல்களையும் ஊத்தி மூடினால் நன்றாகத்தான் இருக்கும்.

Trending News