விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. இத்தொடரில் தற்போது ஐபிஎஸ் இன்டர்வியூக்காக சந்தியா மற்றும் சரவணன் சென்னைக்கு பஸ்ஸில் செல்கிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக பஸ் பாதியிலேயே நின்று விடுகிறது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சந்தியா பதறிப் போய் உள்ளார். ஆனால் சரவணன், சரியான நேரத்தில் உங்களை அழைத்து செல்வேன் என்று உறுதியாக சந்தியாவிடம் கூறுகிறார். இதனால் அந்த வழியாக காரில் செல்பவர்கள் இடம் சரவணன் உதவி கேட்கிறார்.
Also Read :கண்ணம்மா நெத்தி பொட்டில் துப்பாக்கி.. எதிர்பாராத ட்விஸ்ட்
ஆனால் யாரும் அவர்களுக்கு உதவ முன் வரவில்லை. அப்போது பைக்கில் வருபவர்களிடம் சரவணன் தன்னுடைய சூழ்நிலையை சொல்லி உதவி கேட்கிறார். அவர்கள் பைக்கை சரவணனிடம் கொடுக்கிறார்கள். இதனால் சந்தியா மற்றும் சரவணன் சென்னைக்கு பைக்கில் செல்கிறார்கள்.
அந்த நேரத்தில் திருடர்கள் ஒருவரின் ஹேண் பேக்கை திருடி செல்கிறார்கள். அதைப் பார்த்த சந்தியா மற்றும் சரவணன் திருடர்களை விரட்டி பிடிக்கிறார்கள். அதுவும் சரவணன் ஹீரோ போல திருடர்களை அடித்த துவம்சம் செய்கிறார்.
Also Read :2ம் திருமணத்திற்கு அம்மாவை அழைத்த கோபி.. யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்
சந்தியாவும் இப்போதே ஐபிஎஸ் மாதிரி திருடர்களை அடிக்கிறார். கடைசியில் ஹேண் பேக்கை திருடர்களிலிருந்து இடமிருந்து மீட்கிறார்கள். சரவணன் சண்டை விட்டதை பார்த்த சந்தியா சரவணனுக்கு முத்தம் கொடுக்கிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக சீரியல்களில் சினிமாவை போல் சில காட்சிகள் வைக்கப்பட்டு வருகிறது. இதே ராஜா ராணி தொடரில் ஆதி மற்றும் ஜெனி இடையே முத்த காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சி இணையத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. தற்போது மீண்டும் ஒரு மகாட்சி இடம் பெற்றுள்ளது.
Also Read :ஏமாந்துபோன பிக் பாஸ் ஜூலி.. மேடையில் கண்ணீர் விட்டு கதறல்