வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கிடுக்கு புடி போட்ட சரவணன்.. அசால்டாக சமாளிக்கும் IPS சந்தியா

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் தன்னுடைய மனைவி சந்தியாவின் சிறு வயது ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற, கணவன் சரவணன் குடும்பத்தாரை எதிர்த்து முழு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இதைப் புரிந்து கொள்ளாத சந்தியா, மாமியார் சிவகாமியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு குடும்பத்திற்கு நல்ல மருமகளாக இருக்க வேண்டும் என தன்னுடைய போலீஸ் கனவை குழி தோண்டி புதைக்க நினைக்கிறாள்.

இதை அறிந்து கொண்ட சரவணன், சந்தியாவின் இத்தகைய மாற்றத்திற்கு அம்மாதான் காரணம் என்பதை கண்டுபிடிக்கிறான். இருப்பினும் சந்தியா தன்னுடைய குடும்பத்திற்காகதான் ஐபிஎஸ் கனவை, மேற்கொண்டு தொடர மறுக்கிறார் என்பதை அம்மாவிற்கு புரியவைக்க நினைக்கிறான்.

இதற்காக சரவணன் சந்தியாவிடம், உங்களுக்கு போலீஸ் கனவு இல்லை என்பதை என் மேல் சத்தியம் செய்யுங்கள் என குடும்பத்தார் முன்னிலையில் கிடுக்குப்பிடி போடுகிறான். அதையும் அசால்டாக சமாளிக்கும் சந்தியா, தனக்கு சத்தியத்தின் மீது துளிகூட நம்பிக்கை இல்லை என்றும் சிறுவயதில் போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது உண்மைதான்.

ஆனால் என்னுடைய கனவுக்காக இந்த குடும்பத்தாரை கஷ்டப்படுத்தும் அளவுக்கு நான் சுயநலவாதி கிடையாது என சந்தியா சரவணனிடம் வாதாடுகிறார். இதனால் சரவணன், பிடி கொடுக்காமல் பேசும் சந்தியாவை எப்படி சமாளிக்கிறது என்றும், அம்மாவின் போக்கு தவறானது என்பதை எப்படி புரிய வைக்க போகிறேன் என்பதை எல்லாம் நினைத்து குழம்பித் தவிக்கிறான்.

இருப்பினும் ஒரு கட்டத்தில் சந்தியா போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவை உறுதியுடன் மீண்டும் கையில் எடுத்துக்கொண்டு அதற்காக குடும்பத்தாரையும் எதிர்த்து சரவணனின் உறுதுணையுடன் விரைவில் ஐபிஎஸ் அதிகாரியாக சீரியலில் கலக்கப் போகிறாள்.

அத்துடன் தற்போது சந்தியாவாக நடித்துக்கொண்டிருக்கும் ஆலியா மானசா தற்காலிகமாக சீரியலில் இருந்து விலகி இருப்பதால், அவருக்கு பதில் நடிகை ரியா இனி வரும் நாட்களில் சந்தியாவாக நடிக்கப்போகிறார். புது சந்தியா மற்றும் சரவணன் காம்போ எப்படி இருக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News