வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஹீரோவாகும் ராஜா ராணி சீரியல் நடிகர்.. அடுத்த சிவகார்த்திகேயன் என பில்ட்டப் பண்ணும் நடிகர்

சினிமாவை விட தினம்தோறும் பார்க்கும் சீரியல்களில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் வெகு சீக்கிரம் ரசிகர்களின் மனதில் பதிந்து விடுவார்கள். இன்னிலையில் சின்னத்திரையின் மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

அதிலும் விஜய் டிவியிலிருந்து பிரபலமாகி வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் பலர். அதில் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற நடிகர்களின் வரிசையில் தற்போது சீரியல் நடிகர் ஒருவரும் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

Also Read: டிஆர்பி-க்கு பலே திட்டம் போட்டு இருக்கும் விஜய் டிவி

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ராஜா ராணி 2 சீரியலின் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சித்து, இந்த சீரியலின் மூலம் பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார். இதற்கு முன்பே திருமணம் என்ற சீரியலில் நடித்து பிரபலமான சித்து அந்த சீரியலில் கூட நடித்த நடிகை ஸ்ரேயாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

சொந்த ஊரான திருவண்ணாமலையிலிருந்து சினிமா கனவுகளுடன் கிளம்பி வந்த சித்து, சுமார் 6 ஆண்டுகளாக நடன கலைஞராக பணியாற்றிய பிறகுதான் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று, தற்போது தமிழ் ரசிகர்களின் பேவரைட் சின்னத்திரை ஹீரோவாக உயர்ந்துள்ளார்.

Also Read: காசுக்காக விஜய் டிவி செய்யும் வேலை

ராஜா ராணி 2 சீரியலின் கதாநாயகி ஆலியாவை தொடர்ந்து வில்லி அர்ச்சனாவும் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். இருப்பினும் மனம் தளராத சித்து, அவருடைய நடிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிக்காட்டி சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்.

இதற்கு பலனாகவே அவருக்கு தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே கூடிய விரைவில் சித்து நடிக்கும் படத்திற்கான முழு விவரமும் வெளியே வரும். அவரும் அடுத்த சிவகார்த்திகேயனாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஓவர் பில்டப்பில் விதவிதமாக போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார்.

Also Read: டிஆர்பி-யில் சன் டிவி-க்கு ஆப்பு வைத்த விஜய் டிவி

sidhu-cinemapettai
sidhu-cinemapettai

Trending News