திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தேவயானி, ராஜகுமாரன் காதலில் வெடித்த பூகம்பம்.. வெறியாய் சுற்றிய நகுல்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் குடும்பபாங்கான பெண் கதாபாத்திரம் என்றாலே இயக்குனர்களின் முதல் சாய்ஸ் தேவயானி தான். இவர் கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

தேவயானி தெலுங்கு, பெங்காலி, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தேவயானி நடித்த சூரியவம்சம் படத்தில் துணை இயக்குனராக ராஜகுமாரன் பணியாற்றினார். அதன்பிறகு, இயக்குனர் ராஜகுமாரன் தேவயானியை கதாநாயகியாக வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்தப் பழக்கத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் காதலுக்கு தேவயானி வீட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அவசர அவசரமாக தேவயானி, ராஜகுமாரன் இருவரும் 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் தேவயானி குடும்பத்தினர் ராஜகுமாரன் மீது போலீஸ் புகார் கொடுக்கும் அளவிற்கு இது சென்றது. இந்நிலையில் பல வருடங்களாக தேவயானி குடும்பத்தினர் தேவயானியிடம் பேசாமல் இருந்துள்ளனர். தற்போது இவர்கள் இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அதன்பிறகு தேவயானி குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். ஆனால் தற்போது வரை தேவயானியின் தம்பி நகுல் ராஜகுமாரனிடம் பேசியதே கிடையாதாம். அதுமட்டுமல்லாமல் நகுல் தேச விரோதியைப் பார்ப்பதைப் போல ராஜகுமாரனை வெறியோடு பார்ப்பாராம்.

மேலும், தேவயானி குடும்பத்தில் யாரும் தன்னிடம் பேசுவதில்லை என ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அத்துடன், தமிழ்நாட்டு மக்களும், இந்த கலை உறவும் தான் எனக்கு சொந்தம் என பெருமிதமாக பேட்டியில் கூறியுள்ளார்.

Trending News