புதன்கிழமை, ஜனவரி 8, 2025

500 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கும் ராஜமௌலி.. 1000 கோடிக்கு லாபத்தை எதிர்பார்க்கும் நடிகர்

பிரம்மாண்ட இயக்குனராக பலரையும் பிரம்மிக்க வைத்த ராஜமௌலியின் இயக்கத்தில் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது அதைத் தொடர்ந்து அவரின் அடுத்த பிரம்மாண்ட படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அந்த வகையில் அவர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்து பல மாதங்களாகவே தகவல்கள் உலா வந்தாலும் தற்போது இது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

Also read:பொன்னியின் செல்வனில் நயன்தாரா குரலா? நந்தினியின் கம்பீரக் குரல் இவருடையதுதான்

மேலும் இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இப்படம் ஒரு உலகளாவிய அதிரடி சாகச திரைப்படமாக இருக்கும் என்றும், அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கான முதற்கட்ட வேலையில் பிஸியாக இருக்கும் ராஜமவுலி இப்படத்தை கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறாராம். மேலும் ஆப்பிரிக்காவில் உள்ள காடுகளில் இப்படத்தை எடுத்து முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Also read:பொன்னின் செல்வன் படத்தில் தளபதி விஜய், மகேஷ்பாபு.. செதுக்கி வைத்திருந்த மணிரத்தினம்

அந்த வகையில் இப்படம் அடுத்த வருடத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மாதங்களாக இந்த படத்திற்கான ஸ்கிரிப்டை கஷ்டப்பட்டு தயார் செய்திருந்த ராஜமவுலி தற்போது அடுத்த கட்ட நகர்வுக்கு ஆயத்தமாகியுள்ளார்.

தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை தற்போது ஒட்டு மொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டும் வகையில் ராஜமௌலியின் படம் இருக்குமாம். அது மட்டுமல்லாமல் இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

Also read:மணிரத்தனத்தின் பிரமாண்ட படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. இப்பவரைக்கும் திமிராகவே இருக்கும் பிரபலம்

Trending News