Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அடுத்த 500 கோடி பட்ஜெட் படத்தை உறுதி செய்த ராஜமவுலி.. கதை எழுதுவது யார்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

அடுத்த 500 கோடி பட்ஜெட் படத்தை உறுதி செய்த ராஜமவுலி.. கதை எழுதுவது யார்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி தனது பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியிருந்தார். ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் […]

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி தனது பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியிருந்தார். ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் பலர் நடிப்பில் இப்படம் வெளியானது.

சமீபத்தில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் மூன்றாவது இடத்தை ஆர் ஆர் ஆர் படம் பெற்றிருந்தது. அதாவது கிட்டதட்ட 1100 கோடி உலகம் முழுவதும் இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது மீண்டும் ஒரு 500 கோடி பட்ஜெட் படத்தை எடுக்க உள்ளதாக ராஜமவுலி அறிவித்துள்ளார்.

அதாவது ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் விரைவில் உருவாக உள்ளதாம். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தின் கதையை யார் எழுதி வருகிறார் என்று கேட்டால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் காத்திருக்கிறது.

அதாவது ராஜமவுலி தனது தந்தை விஜேந்திர பிரசாந்த் உடன் இணைந்து கதை எழுதும் பணியில் ஈடுபட்ட வருகிறாராம். ஏற்கனவே ராஜமவுலியின் பாகுபலி படத்திலும் விஜேந்திர பிரசாந்த் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜெயிலர் படத்திலும் இவர் பணியாற்றுவதாக தகவல் வெளியானது.

பாகுபலி படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தான் அதிகமான வசூல் செய்தது. அதேபோல் ஆர் ஆர் ஆர் படத்தின் முதல் பாகமே நல்ல வசூலை ஈட்டிய நிலையில் இரண்டாம் பாகம் 1500 கோடியை தாண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் ராஜமௌலி இப்படத்தைப் பற்றிய அடுத்த அடுத்த அப்டேட்டுகளை விரைவில் அறிவிக்க உள்ளார். ராம்சரண் தற்போது ஷங்கர் படத்தில் பணியாற்றி வருவதால் இந்த படத்தை முடித்த கையோடு ஆர் ஆர் ஆர் 2 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.