வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தலைசுற்றும் அடுத்த படத்தின் பட்ஜெட்.? ராஜமௌலிக்காக போட்டிபோடும் 4 கார்ப்பரேட் முதலைகள்

பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கியவர் எஸ் எஸ் ராஜமவுலி. தன்னுடைய பிரம்மாண்டமான கதைகளத்தோடு இவர் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் தெலுங்கிலும் சரி, மற்ற மொழிகளிலும் சரி பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரசிகர்களிடம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, மாஸ் வெற்றியையும், வசூல் சாதனையையும் படைத்துள்ளது. இதனிடையே ராஜமவுலியின் அடுத்த திரைப்படத்திற்கான கதைக்களம் ரெடியான நிலையில் இவரின் திரைப்படத்தை வாங்குவதற்காக நான்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

தமிழ்,தெலுங்கு,மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வரவேற்ப்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பல மாநிலங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து தங்களுடைய நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே ராஜமௌலி தற்போது ஓய்வில் இருந்து வந்த நிலையில் இவரது அடுத்த படத்தை காண வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் ஓய்வில் இருந்ததெல்லாம் போதும் என நினைத்து தன்னுடைய அடுத்த படத்திற்கான கதைக்களத்தை வேகமாக இயக்கி வருகிறார் ராஜமௌலி. ஏற்கனவே ராஜமவுலி மற்றும் தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் உருவாகும் என்று தெலுங்கு திரை உலகத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் கதைக்களம் ரெடி ஆகிவிட்டதாகவும், இப்படத்தை தயாரிப்பாளர் கே .எல்.நாராயணன் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இப்படத்தினை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாகவும், புதையலை தேடும் கதைக்களமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஆப்ரிக்காவில் படப்பிடிப்பு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பேன் இந்தியா திரைப்படமாக ராஜமவுலி இயக்கும் இத்திரைப்படத்திற்கு முதலீடுகளை போடுவதற்காக பல முன்னணி கார்பரேட் நிறுவனமான பாலிவுட்டின் பெண் ஸ்டுடியோ நிறுவனம், தமிழில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் இப்படத்தில் திரையரங்கு டிஸ்ட்ரிபியூஷன் வாங்குவதற்கு போட்டி போட்டு வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூல் சாதனை படைத்த நிலையில் திரையரங்கு டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு மிகப்பெரிய வசூலை பெற்றுத் தந்தது. மேலும் ராஜமவுலியின் திரைப்படத்தின் கதைக்களம் எப்படி இருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதால் வசூல் அதிகமாக ஈட்டலாம் என்ற யோசனையில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் ராஜமவுலி மகேஷ்பாபு கூட்டணி மிகப்பெரிய வசூலை பெற்று தரும் என்றும் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

இதனிடையே தற்போது நடிகர் மகேஷ்பாபு கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் சர்க்கார் வாரி பட்டா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இவரின் அடுத்த படமான மேஜர் திரைப்படம் ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் ராஜமவுலி மற்றும் மகேஷ்பாபுவின் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் அடுத்த வருடம் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News