திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஓவர் பந்தா பண்ணிய நடிகை.. ஆளையே மாற்றி தூள் கிளப்பிய ராஜமௌலி

தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் ராஜமவுலி தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவர். அந்த வகையில் இவர் எத்தனையோ திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி திரைப்படம் தான் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது.

அந்த வகையில் பாகுபலி இப்போது வரை அனைவரும் பேசப்படும் ஒரு சாதனை திரைப்படமாக மாறி இருக்கிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் வசூலில் பல சாதனைகள் படைத்தது.

அதில் ராஜமாதாவாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. அதுவரை நீலாம்பரி என்று அழைக்கப்பட்டு வந்த ரம்யா கிருஷ்ணன் அதன் பிறகு ராஜமாதாவாகவே மாறிப்போனார். அப்படிப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 80 கால தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நடிகை ஸ்ரீதேவி தான்.

ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரீதேவியை பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதாவாக நடிக்க இயக்குனர் கேட்டிருக்கிறார். அதற்கு சம்மதித்த ஸ்ரீதேவி கதையில் அது சரி இல்லை, இது சரி இல்லை என்று ஏகப்பட்ட இடையூறுகள் செய்திருக்கிறார்.

மேலும் இப்படித்தான் நடிப்பேன், இது போன்ற காட்சிகள் வைக்கக்கூடாது என்று பயங்கர அலப்பறை கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சம்பள விஷயத்திலும் கொஞ்சம் கெடுபிடி பண்ணியிருக்கிறார். அதை பார்த்து கடுப்பான ராஜமவுலி கொஞ்சமும் யோசிக்காமல் அவரை இந்த படத்தில் நடிக்க வைக்கும் முடிவையே மாற்றிக் கொண்டாராம்.

அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் அந்த கேரக்டரில் நடிப்பதற்காக வந்தார். அதில் ராஜமாதா என்னும் கதாபாத்திரத்தில் அதிகார தோரணையும், மிடுக்கும் கலந்து ரம்யா கிருஷ்ணன் அற்புதமாக நடித்திருந்தார். சொல்லப்போனால் அந்த கேரக்டருக்கு இவரை தவிர வேறு யாரும் இவ்வளவு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பது தான் இப்போது வரை ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Trending News