மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வருகிறது. வரலாற்று நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வசூலிலும் நல்ல லாபம் பார்த்து வருகிறது.
படத்தைப் பார்த்த பலரும் மணிரத்தினத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பிரம்மாண்ட இயக்குனர் என்று தெலுங்கு துறையுலகில் வலம் வரும் ராஜமௌலியையும் சிலர் விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் பாகுபலி இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also read:விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்.. முதல் நாளே கோடிகளை குவித்து வசூல்
இதுவரை ராஜமவுளியை பார்த்து வியந்து புகழ்ந்த ரசிகர்கள் தற்போது பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு பிறகு அவரிடம் இருக்கும் குறைகளை ஆராய ஆரம்பித்துள்ளனர். அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஹீரோவுக்கான எந்த மாஸ் காட்சிகளும் கிடையாது. டான்ஸ் கூட இப்போது இருக்கும் தலைமுறைக்கு ஏற்றது போல் இல்லாமல் அரசர் காலத்தில் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது.
ஒரு சரித்திர திரைப்படம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்ற அத்தனை விதிமுறைகளையும் மணிரத்தினம் சரியாக கடைபிடித்துள்ளார். அதனால் தான் இந்த பொன்னியின் செல்வன் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் பாகுபலி திரைப்படத்தை ராஜமவுலி அப்படி எடுக்கவில்லை.
Also read:மணிரத்னத்தை பார்த்து வியந்துபோன ராஜமவுலி.. எழுந்து நின்ற சம்பவத்தை கூறிய ஜெயம் ரவி
அதுவும் அரசர் கால திரைப்படம் தான். ஆனால் அதில் ராஜமவுலி சில விஷயங்களை வேண்டுமென்றே திணித்திருப்பார். அதாவது ஒரு பாடல் காட்சியில் பிரபாஸ், தமன்னாவின் உடையை களைவது போன்று காட்டப்பட்டு இருக்கும். அது மட்டுமல்லாமல் ஐட்டம் டான்ஸ் போன்றவையும் இருக்கும்.
அந்த படத்திலேயே ஒரு காட்சியில் பெண்களின் மேல் கை வைத்தால் தலையை துண்டிக்க வேண்டும் என்று ஹீரோ கூறுவார். ஆனால் அவரே ஒரு பாடலில் பெண்களுடன் ஆட்டம் போடுவார். இதுபோன்று பல சொதப்பல்கள் பாகுபலி திரைப்படத்தில் இருக்கிறது. அதையெல்லாம் தற்போது நினைவு கூறும் ரசிகர்கள் ராஜமவுளியை மணிரத்தினத்துடன் ஒப்பிட்டு விளாசி வருகின்றனர்.
Also read:மீண்டும் 1000 கோடி வசூலுக்கு ஸ்கெட்ச் போட்ட ராஜமவுலி.. பிரம்மாண்டமாக உருவாகும் வெற்றிக்கூட்டணி