Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அடுத்த ஆயிரம் கோடிக்கு டார்கெட் செய்யும் ராஜமௌலி.. சூப்பர்ஸ்டாருடன் இணையுள்ள புது கூட்டணி

அடுத்த ஆயிரம் கோடிக்கு டார்கெட் செய்யும் ராஜமௌலி.. சூப்பர்ஸ்டாருடன் இணையுள்ள புது கூட்டணி

இயக்குனர் ராஜமௌலி இயக்கவுள்ள அடுத்தப்படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி, பாகுபலி 2 , ஆர்,ஆர்.ஆர் உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டான நிலையில், இந்தியாவின் தலை சிறந்த இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். மேலும் இவர் இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் மெகாஹிட்டான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்கார் வரை சென்று நாட்டு,நாட்டு பாடலுக்காக விருதையும் வென்றது.

இதனிடையே ராஜமௌலியின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் குறித்து மொத்த இந்திய சினிமாவே காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது. ராஜமௌலி இயக்கப்போகும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிக்கவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அண்மைக்காலமாக ஆர்.ஆர்.ஆர் படத்தையடுத்து தெலுங்கில் வெளியான சில படங்கள் பெரிய அளவில் வெற்றிப்பெறவில்லை.

முன்னணி நடிகர்களான நானி உள்ளிட்டோரின் திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றுவரும் நிலையில், தெலுங்கு சூப்பர்ஸ்டாரான நடிகர் மகேஷ் பாபுவின் படங்களும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இருந்தாலும் அண்மையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் குண்டூர் காரம் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இயக்குனர் திரிவிக்ரம் இயக்கி வரும் இப்படத்தின் ரிலீஸ் அடுத்தாண்டு ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனிடையே இப்படத்தை தொடர்ந்து ராஜமௌலியுடன், மகேஷ் பாபு இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க, முழுக்க சாகசங்கள் மற்றும் அக்க்ஷன் திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளதாகவும், இப்படத்தில் அதிகப்படியான விலங்குகள் காட்சிப்படுத்தபடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்திற்கான கதை தற்போதுவரை ராஜமௌலி எழுதி முடிக்காத நிலையில், வரும் ஆகஸ்ட் 9 மகேஷ் பாபுவின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே பல நாட்களாக ராஜமௌலி கூட்டணியில் உருவாக உள்ள இப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், இப்படத்தில் அவர் வில்லன் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், மற்ற நடிகர், நடிகைகள் யாரும் தற்போதுவரை தேர்வாகவில்லை. மேலும் ராஜமௌலி, மகேஷ்பாபு கூட்டணியில் உருவாக உள்ள இப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்படும் என்றும், முந்தைய படங்களை போல இப்படத்திலும் 1000 கோடி வசூலை அசால்ட்டாக எடுத்துவிட தற்போதே ராஜமௌலி கங்கணம் கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.